செய்திகள் :

SAvInd : 'வீணான வருண் சக்கரவர்த்தியின் அசாத்திய பௌலிங்!' - தோல்விக்கு காரணமான அந்த 3 விஷயங்கள்!

post image
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்ந்திருக்கிறது. முதல் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி வென்ற நிலையில் இரண்டாம் போட்டியில் இந்தியா எங்கே சொதப்பியது?

பேட்டர்களின் தடுமாற்றம்:

முதல் போட்டியில் இந்திய அணி 202 ரன்களை அடித்திருந்தது. இந்தியா சார்பில் சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக ஆடி சதமடித்திருந்தார். மற்ற வீரர்களும் ஓரளவுக்கு நன்றாக ஆடி கணிசமான பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். முதல் போட்டி நடந்த டர்பனை விட இரண்டாவாது போட்டி நடந்த செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானம் பௌலர்களுக்கு கூடுதலாக ஒத்துழைப்பதாக இருந்தது. பந்து கொஞ்சம் மூவ் ஆனது. தென்னாப்பிரிக்க பௌலர்களும் தங்களின் முக்கிய ஆயுதமான ஷார்ட் பால்களை வீரியமாக பயன்படுத்தியிருந்தன.

Sanju Samson

சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகியிருந்தார். ஓப்பனிங்கில் ஒரு மொமண்டமே கிடைக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா நின்று ஆடியிருந்தாலும் அவராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. 100 க்கு கீழான ஸ்ட்ரைக் ரேட்டில் 45 பந்துகளுக்கு 39 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் என இருவருடைய ஸ்ட்ரைக் ரேட் மட்டும்தான் 100 க்கு மேல் இருந்தது. மற்ற வீரர்கள் ரன்னும் சேர்க்கவில்லை, நிற்கவும் இல்லை. இந்த பேட்டிங் தடுமாற்றம்தான் இந்தியாவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

ஒத்துழைப்பு கொடுக்காத பௌலர்கள்:

சிறிய ஸ்கோரை அடித்திருந்தாலும் ஒரு கட்டம் வரைக்கும் போட்டியை இந்திய அணிதான் கைக்குள் வைத்திருந்தது. அதற்கு காரணம் வருண் சக்கரவர்த்தி. 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவரின் ஆகச்சிறந்த செயல்பாடு இது. ரீஷா ஹென்றிக்ஸ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், க்ளாசென் என அபாயகரமான விக்கெட்டுகள் அத்தனையையும் வருண் வீழ்த்திக் கொடுத்துவிட்டார். வருணின் பௌலிங்கில் தென்னாப்பிரிக்க அணியே கொஞ்சம் கலங்கிதான் போயிற்று. அதனால்தான் மில்லருக்கும் க்ளாசெனுக்கும் முன்பாக யான்செனை இறக்கிவிட்டார்கள். அப்படியிருந்தும் இந்திய அணியால் ஜெயிக்க முடியவில்லை.

Varun Chakaravarthy

ட்ரிஸ்டன் ஸ்டப்ஸூம் கோட்சியாவும் கடைசியில் ஒரு கூட்டணி அமைத்தார்கள். இந்த கூட்டணியை யாராவது உடைத்திருந்தால் கூட போட்டி இன்னும் நெருக்கமாக சென்றிருக்கும். ஆனால், அதையும் எந்த பௌலர்களாலும் செய்ய முடியவில்லை. விளைவு, வருணின் அசாத்தியமான பந்துவீச்சுக்கு தோல்வியே பரிசாக கிடைத்திருக்கிறது.

வியூகமற்ற டெத் ஓவர்கள்:

பேட்டிங்கிலு சரி பௌலிங்கிலும் சரி இந்திய அணி டெத் ஓவரில் கடுமையாக சொதப்பியது. 'இனிமே அந்தப் பக்கம் நின்னு ஜாலியா வேடிக்கை மட்டும் பாரு!' என அர்ஷ்தீப்பிடம் சவடால் விட்ட ஹர்திக்கால் கடைசி 2 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இங்கே கூடுதலாக ஒரு 10 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தால் கூட அது இந்திய அணிக்கு பௌலிங்கில் கொஞ்சம் உதவியாக இருந்திருக்கும். அதேமாதிரி, பௌலிங்கிலுமே இந்திய அணி டெத் ஓவர்களில்தான் சொதப்பியது. ஜெரால்ட் கோட்சியா 9 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். அவரின் கேமியோதான் இந்தியாவுக்கு வினையாக அமைந்தது.

Suryakumar Yadav

அர்ஷ்தீப் சிங்கும் ஆவேஷ் கானும் கடைசி சில ஓவர்களை இன்னும் பொறுமையாக பக்குவமாக வீசியிருக்க வேண்டும். ஆவேஷ் கானிடம் வேகம் இருந்ததே தவிர விவேகம் இல்லை. யார்க்கராக வீச முயன்று லோ புல்டாஸாகவும் புல் லெந்திலும் வீசி லாவகமாக ஷாட் ஆட கொடுத்தார். சூர்யகுமாரும் கடைசி 4 ஓவர்களையும் முழுமையாக வேகப்பந்து வீச்சாளர்களிடம் கொடுக்க நினைத்த முடிவை மறுபரிசீலனை செய்திருக்கலாம். ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் திணறினார்கள். அப்படியிருக்க அக்சரை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்தியிருக்கலாம். டெத்தில்கூட அவருக்கு ஒரு ஓவரை கொடுத்திருக்கலாம்.

IPL Mega Auction:'டெல்லியின் கோலியை பெங்களூருவுக்கு எப்படி கடத்தினார் மல்லையா?' - Auction Rewind 2

ஐ.பி.எல் இன் 18 வது சீசனுக்கு முன்பான மெகா ஏல சமயத்தில் நிற்கிறோம். கடந்த 17 ஆண்டுகளில் ஐ.பி.எல் இல் மாறவே மாறாத ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா? விராட் கோலிதான். கடந்த 17 ஆண்டுகளில் அவர் பெங்களூரு அணிக்... மேலும் பார்க்க

IPL Mega Auction: 'இந்தியா சிமெண்ட்ஸ் Vs ரிலையன்ஸ்' தோனியை CSK வாங்கிய கதை | 2008 Auction Rewind - 1

தோனி, இன்றைய தேதிக்கு இந்திய விளையாட்டுலகம் இதற்கு முன் கொண்டாடிடாத அளவுக்கு கொண்டாடப்படும் மாபெரும் வீரர். ஐ.பி.எல் என்கிற ஒரு கிரிக்கெட் லீகே அவரை நம்பியிருக்கிறது. அவருக்காக லீகின் விதிகளையே மாற்றி... மேலும் பார்க்க

Gambhir: 'இந்தியாவை விமர்சிக்க பாண்டிங் யார்?!' - கம்பீரின் கோபம் நியாயமானதா?

ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வதற்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளார் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அதில் ரிக்கி பாண்டிங் முன்வைத்த ஒரு விமர்சனம் பற்றிய கேள்விக்கு கம்பீர் அளித்த பதில் ... மேலும் பார்க்க

Ashwin: 'இந்தியாவை விட நியூசிலாந்து தகுதியான அணியாக இருந்தது!' - ஒயிட் வாஷ் பற்றி அஷ்வின்!

நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரை 0-3 என தோற்று ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது இந்திய அணி. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உள்ளூரில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆவத... மேலும் பார்க்க

CSK செய்தது தேசநலனுக்கு எதிரானதா? - உத்தப்பாவின் விமர்சனமும் நிதர்சனமும்

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக ஆடியிருந்தார். ரச்சின் ரவீந்திரா இந்தத் தொடருக்கு முன்பாக சென்னையிலுள்ள சி... மேலும் பார்க்க