`ஓட்டு கேட்டு வராதீங்க'-அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ்; ஈரோட்டில் பரபரப்...
Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான்
நடிகை குறித்து அவதூறாகப் பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருக்கிறார்.
சீமான் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை 2011-ல் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
இதனால் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீமான் இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கோர தவறினால், சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
மேலும் இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சீமான் மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார்.

"எனது சொல், செயல்களால் நடிகைக்கு வலி, காயம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.
இனி நடிகை குறித்து அவதூறாகப் பேசமாட்டேன்" என்றும் சீமான் தெரிவித்திருக்கிறார்.