செய்திகள் :

Seeman : 'உருட்டுக்கட்டையுடன் தொண்டர்கள்; பிரியாணி போடும் சீமான்' - இராவணக்குடில் களேபரங்கள்!

post image
நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டை பெரியாரிய ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகையிட முயன்று கைதாகியிருக்கின்றனர். இந்த முற்றுகையை முன்னிட்டு சீமானின் வீட்டை சுற்றி நாம் தமிழர் தொண்டர்கள் உருட்டுக்கட்டையோடு நிற்கும் சம்பவமும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடந்த ஒரு கட்சி கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் குறித்து காட்டமாக பேசியிருந்தார். இந்தப் பேச்சு பெரியாரிய ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. சீமானும் தொடர்ச்சியாக ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பெரியார் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனைத் தொடர்ந்துதான் மே 17 இயக்கம் சார்பில் பெரியாரிய அமைப்புகள் ஒன்றிணைந்து சீமானின் வீடு இன்று முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சீமானின் வீட்டு முன்பாக சுமார் 100 தொண்டர்கள் நேற்று இரவு முதல் அவருக்கு பாதுகாப்பாக நின்று வருகின்றனர். அவர்கள் உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களையும் வைத்திருந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சீமானின் வீட்டிலேயே அவர்களுக்கு காலை, மதியம் என இட்லி, பொங்கல், வடை, சுடச்சுட பிரியாணி என சமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பேசும் நாம் தமிழர் கட்சியினர், இந்த உருட்டுக்கட்டைகள் எங்களின் தற்காப்புக்காக வைத்திருக்கிறோம்’ என்கிறார்கள். மேலும், ''21 ஆம் தேதி அண்ணன் ஈரோட்டுக்கு போகிறார் என கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் துரைமுருகன் பேசிய நிலையில், முற்றுகை போராட்ட அறிவிப்பை தொடர்ந்துதான் சீமான் வீட்டிலேயே இருக்கிறார் போல.." என்றனர்.

இந்நிலையில், சீமானின் வீட்டை நோக்கி முற்றுகை பேரணியை தொடங்கிய பெரியாரிய ஆதரவாளர்கள், அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கிரஸ் எம்.பி., தாக்கு

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவி தாக்கப்பட்ட சம்பத்தைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்த... மேலும் பார்க்க

TVK Vijay : `ஆண்டு விழாவுக்கு முன்னதாக... உத்தரவிட்ட விஜய்’ - பரபரக்கும் த.வெ.க முகாம்!

தமிழக வெற்றிக் கழகம்தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு முன்னதாகவே நிர்வாகிகள் பட்டியலை வெளியிட தீவிரமாகி வருகிறது த.வெ.க தலைமை. அதுதொடர்பாக, கட்ச... மேலும் பார்க்க

`புதுச்சேரி பல்கலை., மாணவிக்காக சவுக்கால் அடித்துக் கொள்வாரா?’ – அண்ணாமலையை சீண்டிய நாராயணசாமி

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புது... மேலும் பார்க்க

Explained: பிறப்புரிமை குடியுரிமை; `நோ’ சொன்ன ட்ரம்ப் - அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதிப்பு என்ன?

அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு தனது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் டொனால்டு ட்ரம்ப். அதில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்பு ‘பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடி... மேலும் பார்க்க

``பதவிக்காக தமிழ்நாட்டையே பாஜக-விடம் அடமானம் வைத்தவர் பழனிசாமி!” - செந்தில் பாலாஜி காட்டம்

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில்,”தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, ப... மேலும் பார்க்க

காரைக்குடி: ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க 3 கி.மீ தூரம் நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின்!

சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரைக்குடி சாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.மு.க.ஸ்டாலின் ரோடு ஷோகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ... மேலும் பார்க்க