செய்திகள் :

Serial Update: மகளிர் அணிச் செயலாளர் ஆன வில்லி முதல் பிடித்த இயக்குநருடன் ஜோடியாக நடித்த நடிகை வரை

post image

தயாரான ஆடுகளம்!

பூஜை போடப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக கிடப்பில் கிடந்த 'ஆடுகளம்' சீரியலின் ஒளிபரப்பு தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. சன் டிவியில் வரும் 8ம் தேதியிலிருந்து தொடங்கும் சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு ஒளிபரப்பாகவிருக்கிறது.

நடிகர் டெல்லி கணேஷ் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் மறைந்தார். எனவே சீரியலில் அவர் நடித்த காட்சிகள் எவ்வளவு நாள் ஒளிபரப்பாகும், பிறகு அவருடைய கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்கிற கேள்விகளுக்கு, 'இன்னும் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்கிற பதிலையே தருகிறார்கள். தொடரின் ஒளிபரப்பு தொடங்கிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இருக்கிறார்களாம்.

தீபா
தீபா

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த  தொடரில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் தீபா. தயாரிப்ப்பு நிர்வாகி கணேஷ் பாபுவுடன் திருமணம், அதனையடுத்து அவருடனான பிரிவு என பல பிரச்னைகளால் கொஞ்ச காலம் நடிப்பிலிருந்து இவர் ஒதுங்கியிருந்தது நினைவிருக்கலாம்.

'பர்சனல் பிரச்னைகளால் என்னுடைய தொழில் ரொம்பவே பாதிக்கப்பட்டுச்சு. முக்கியமான சில சேனல்கள்ல் எனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அதனால இந்த சீரியல் வாய்ப்பு தந்தவங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிச்சிக்கிடுறேன்' என்ற தீபா தற்போது திருக்கோயில்கள் கூட்டமைப்பு என்கிற ஆன்மிக அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளாராம். இந்த அமைப்பின் மாநில மகளிர் அணிச் செயலாளராகவும் நியமிக்கப்ப்பட்டிருக்கிறார்.

வட போச்சே!

தீபாவுக்கு உற்சாகமென்றால் ஆனந்தியோ வருத்தத்தில் இருக்கிறார்.

'ஜோடி' ரியாலிட்டி ஷோ மூலம் ரொம்பவே பரிச்சயமான ஆன்ந்தி பிறகு சில சீரியல்களில் நடித்தார். 'தாரை தப்பட்டை' உள்ளிட்ட சில படங்களிலும்கூட தலைகாட்டினார். தொடர்ந்து திருமணம், குழந்தைகள் என ஒரு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டவர் டிவியிலோ அல்லது சினிமாவிலோ நிச்சயம் கம் பேக் இருக்குமெனச் சொல்லி வந்தார்.

டிவியில் சில சீரியல் வாய்ப்புகள் வந்தனவாம். ஆனால் வந்தவர்கள் எல்லோருமே அக்கா, அண்ணி கேரக்டருக்கே கூப்பிட, 'அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்கு' எனச் சொல்லித் திருப்பி அனுப்பி விட்டாராம். சரி, சினிமா?

ஆனந்தி

'அங்க இருந்தும் சில வாய்ப்புகள் வந்தன. சில படங்கள் பேசிட்டிருக்காங்க. அது பத்தி இப்ப வெளியில சொல்லக்கூடாது. ஆனா சந்தானம் சாருடைய 'டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல்' படத்துல கூப்பிட்டாங்க. அதுவும் டைரகடர் கௌதம் மேனன் ஜோடியா கூப்பிட்டாங்க. அவரு டைரக்‌ஷன்ல நடிக்க பெரிய பெரிய ஹீரோயின்கள்லாம் ஆசைப்பட்டிருப்பாங்க, நமக்கு அவர் கூடவே ஜோடி போட சான்ஸ் கிடைச்சிருக்கே'னு சந்தோஷமாப் போய் நடிச்சிட்டு வந்தேன். ஒரு ஷெட்யூல்தான் ஷூட் போச்சு. அடுத்த ஷெட்யூல்ல மொத்தமா கதையையே மாத்திடாங்கன்னு சொல்லிட்டாங்க. கடைசியில 'வட போச்சே' கதையாகிப் போச்சு. ஆனா சம்பளம் கரெக்டா வந்ததாலும், பேவரைட் இயக்குநர் கௌதம் சாருடன் நடித்ததாலும் சந்தோஷப்பட்டுக்கிட்டேன்' என்கிறார் ஆனந்தி.

காயத்துக்கு மருந்து!

அடுத்த அப்டேட் நடிகை  ஜெனிப்ரியாவுடையது. சந்தித்த பெரிய ஏமாற்றத்திலிருந்து மீண்டு வந்து அடுத்த பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் இவர்.

பைலட்டைத் திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகும் கனவுடன் இருந்தவரின் கனவை ஒரே இரவில் களைத்துப் போட்டுவிட்டார் அந்த பைலட். ஜெனிப்ரியாவின் நகைகளை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்ட அந்த நபர் மீது சென்னையில் புகார் கொடுத்து விட்டு நடவடிக்கைக்காக காத்துக்கிடந்தவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறாராம்.

ஜெனிப்ரியா

'ஃப்ரண்ட் ஒருத்தங்க ஆயுர்வேத மெடிசன் தரும் ஹாஸ்பிடல் வச்சிருக்காங்க. அட்மினிஸ்ட்ரேஷன் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல அவங்களுக்கு சப்போர்ட்டா சில வேலைகளைப் பண்ணத் தொடங்கியிருக்கேன். புது விஷயங்கள்ல கவனம் செலுத்தறபோது பழைய காயங்களுக்கு அது நல்ல மருந்தா இருக்கு. தவிர என்னுடைய மேக் அப் ஸ்டூடியோவையும் புதுப்பிச்சு நடத்தலாம்னு இருக்கேன்'' என்கிறார் இவர்.

இருவரும் ஒரே ஊர்; காதல் கல்யாணம் செய்தவங்கதான்; சீரியல் நடிகர் ஐயப்பன் - மனைவி இடையே என்ன பிரச்னை?

சீரியல் நடிகர் ஐயப்பனின்மனைவி விந்தியா இரு தினங்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட் சென்று அவரைச் சந்திக்க முயன்றது, அங்குள்ளவர்கள் அவரை அனுமதிக்க மறுத்தது, தொடர்ந்து ஐயப்பன் குறித்து மீடியா முன் சில குற்றச்... மேலும் பார்க்க

நடிகர் ‘சஹானா’ ஶ்ரீதர் மரணம்; சின்னத்திரை நடிகர்கள் அஞ்சலி!

சின்னத்திரையில் பரிச்சயமானவர் ஶ்ரீதர் சுப்பிரமணியம். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ தொடரிலும் இவர் நடித்திருந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘வள்ளியின் வேலன்’ தொடரிலும் இ... மேலும் பார்க்க

`பாலசந்தர் சார் தொடங்கி வச்ச பயணம்' - `சஹானா' ஸ்ரீதர் மறைவு; கலங்கும் நண்பர்கள்

சீரியல் நடிகர் ஶ்ரீதர் நேற்று பிற்பகல் சென்னையில் காலமானார். மாரடைப்பு காரணமாக உயிர்பிரிந்ததாகக்கூறுகின்றனர். இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.கே.பாலச்சந்தர் எழுதிஇயக்கி வெளிவந்த 'சஹானா' தொ... மேலும் பார்க்க

Tharshan: நீதிபதி மகன் அளித்த புகார்; பிக் பாஸ் தர்ஷன் கைது - நடந்தது என்ன?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் 'கூகுள் குட்டப்பா' என்ற படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விளம்பரங்கள் மற்றும் தொ... மேலும் பார்க்க

`அது என் பர்சனல்' - ரெட் கார்டு சர்ச்சை; சீரியல் விலகல் குறித்து ரவீனா

விஜய் டிவியின் 'சிந்து பைரவி' சீரியலில் கமிட் ஆகிவிட்டு,பிறகு விலகிய 'பிக் பாஸ்' ரவீனா தாஹா சின்னத்திரையில் வேறு சீரியல்களிலோஅல்லது ரியாலிட்டி ஷோக்களிலோவருவதற்கு ரெட் கார்டு போடப்பட்டிருக்கிறது' என்கி... மேலும் பார்க்க

காரைக்குடியில் செட்டிலா? 'மெட்டி ஒலி' பார்ட் 2 வா? |இப்ப என்ன பண்றாங்க |திருமுருகன் பகுதி 3

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப... மேலும் பார்க்க