செய்திகள் :

Siragadikka aasai : முத்து போடும் ஸ்கெட்ச்... முதல்முறையாக முத்துவுக்கு ஆதரவாகப் பேசிய விஜயா!

post image

சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் ரோகிணி வாரம். பெரும்பாலும் அவர் கதை தான் ஒளிப்பரப்பாகிறது. முத்துவுக்கு ரோகிணி மீதிருக்கும் சந்தேகம் வலுபெற்றுவிட்டது.

மலேசியாவுக்கு போகலாம் என்று முத்து வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கேட்க, ரோகிணிக்கு பதற்றமாகிறது. ரோகிணி மனோஜை தனியாக அழைத்து சென்று, `என் அப்பா சிறையில் இருக்கும் நேரத்தில் இவர்கள் சுற்றுலா செல்வது சரியாக இருக்குமா?' என்று சொல்லி அவரை குழப்புகிறார். மனோஜ் சாவிக் கொடுத்தப் பொம்மையைப் போல, வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சென்று, `ரோகிணி அப்பா சிறையில் இருக்கும் நேரத்தில் யாரும் அங்கு போக வேண்டாம்' என்கிறார்.

Siragadikka aasai

`ரோகிணியின் அப்பாவுக்கு சொந்தக்காரர்கள் என்று நாமிருக்கும் போது, அவர் அங்கு ஆதரவற்று இருக்கிறார். நாம் போனால் அவருக்கு ஆறுதலாக இருக்கும்' என்று முத்து சொல்ல அதனை விஜயா ஏற்கிறார். `முத்து சொல்வது தான் சரி' என்கிறார். அனைவரும் அதிர்ந்துப் பார்கின்றனர். முதல்முறையாக முத்து சொல்வதை சரி என்று விஜயா சொல்லி இருக்கிறார்.

உறவினர்களின் கடினமாக நேரத்தில் உடன் இருப்பதே உண்மையான அன்பு என்று அண்ணாமலையும் சொல்கிறார். அண்ணாமலை, விஜயா, முத்து, மீனா மலேசியா ட்ரிப் போவதாக முடிவாகிறது. ஸ்ருதியும் ரவியும் வேலைக் காரணமாக வரவில்லை என்கின்றனர்.

மீனாவுக்கு முத்துவோட மலேசியா பிளான் அதிர்ச்சி அளிக்கிறது. தனியாக அழைத்துக் கொண்டு போய் திட்டுகிறார். சிறுக சிறுக சேர்க்கும் பணத்தில் மலேசியாப் போவதா என்று மீனா முத்துவை கடிந்துக் கொள்கிறார்.

முத்து மலேசியாப் போவதாக சொன்னது முற்றிலும் பொய் என்கிறார். இது ரோகிணியை பற்றிய உண்மைகளை வெளியேக் கொண்டு வர போட்டத் திட்டம் என்று முத்து சொல்ல மீனா அமைதி ஆகிறார். எப்படியும் ரோகிணி நாம் மலேசியா செல்வதைத் தடுக்க பிளான் போடுவார் என்று முத்து யூகிக்கிறார்.

Siragadikka aasai

முத்து எதிர்பார்த்ததைப் போலவே ரோகிணி மனோஜை வைத்து மலேசியா ட்ரிப்பை நிறுத்த முயற்சி செய்கிறார். ஆனால் அது தோல்வியில் முடிகிறது.

வேறு வழியில்லை என்று மலேசியா மாமாவை வைத்து புதிய திட்டம் போடுகிறார் ரோகிணி. `ரோகிணியின் அப்பா சிறையிலேயே கொல்லப்பட்டுவிட்டதாக அனைவரிடமும் சொல்ல வேண்டும்’ என்கிறார் ரோகிணி. மலேசியா மாமாவாக நடிக்கும் பிரவுன் மணிக்கு இதுபோன்று பொய் சொல்வது பிடிக்கவில்லை. `நேர்மையாக இல்லையென்றால் எப்போதும் பயந்து கொண்டேவாழ வேண்டியிருக்கும்’ என மணி ரோகிணிக்கு அட்வைஸ் செய்கிறார்.

ஆனால் ரோகிணி, `என் வாழ்க்கையை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று எமோஷனலாகப் பேசி மணியை ஆஃப் செய்கிறார்.

மணிக்கு சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக ஏமாற்றி இப்படி பொய் சொல்ல வைக்கின்றனர் ரோகிணியும் வித்யாவும். இந்த நாடகத்தை முத்து கண்டுப்பிடிப்பாரா இல்லையா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.

இதனிடையே ஸ்ருதி ரவியிடம் நாமா ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் ஒன்னா செலவிட்றோம் என்று ரவியிடம் கேள்வி கேட்கிறார். தனக்காக நேரம் செலவிடாதக் கணவரை விவாகரத்து செய்யும் பெண் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியதன் விளைவாக ஸ்ருதி இவ்வாறு கேட்கிறார்.

Siragadikka aasai

ரவி 4 மணி நேரம் என்று சொல்ல, ஸ்ருதி வீட்டிலும் இருக்கும் மற்ற ஜோடிகளிடம் கேட்கிறார். ரோகிணியும் மனோஜும் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் ஒன்றாக நேரம் செலவழிக்கிறோம் என்று சொல்கின்றனர். மீனாவும் முத்துவும் 10 மணி நேரம் செலவழிப்பதாக சொல்ல ஸ்ருதி ரவியை முறைக்கிறார்.

ரவி செய்வதறியாமல் சமாதானம் செய்ய முயல்கிறார். ஆனால் ஸ்ருதி இனி நமக்காக நேரம் செலவழிக்க வேண்டும் என்று சொல்லி மலேசியாவுக்கு நாமும் செல்லலாம் என்கிறார்.

போகாத டூருக்கு எத்தனை பேர் சேர்கிறார்கள்!

மீனாவுக்கு அனைவரும் மலேசியா போகும் எண்ணத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால் முத்து எப்படியும் ரோகிணி இந்த பயணத்தைத் தடுத்து விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மணி சொல்வதை பொய் என்று முத்து நிரூபிப்பாரா? அடுத்தடுத்த எபிசோடில் தெரியும்!

Bigg Boss Jacquline : `சத்யாவும் ஜெஃப்ரியும் அப்படி சிரிச்சது...'' - ஜாக்குலின் Exclusive

பிக் பாஸ் சீசன் 8 முடிந்திருக்கிறது.பணப்பெட்டி டாஸ்கில் களமிறங்கி நேரத்திற்கு, வீட்டிற்குள் திரும்ப முடியாமல் எவிக்ட்டாகியிருந்தார். டைட்டிலை தாண்டி மக்களின் அன்புக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் ஜாக்க... மேலும் பார்க்க

`சைத்ராவும் நட்சத்திராவும் 'உருட்டு'னு சொன்னது ரொம்பவே காயப்படுத்திடுச்சு’ - ஜெய் ஆகாஷ் சொல்வதென்ன?

'நெஞ்சத்தைக் கிள்ளாதே'ஜெய் ஆகாஷ், ரேஷ்மா நடிக்க, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' தொடர் முடிவுக்கு வந்ததையடுத்து, இருவரின் ரசிகர்களின்சமூக வலைதளங்களில் பரஸ்பரம் சண்டைபோட்டு வரு... மேலும் பார்க்க

BB Tamil 8: இவர்கள் Top 5 போட்டியாளர்கள் - ஒரு விரிவான அலசல்

அதான் சீசன் முடிஞ்சு டைட்டில் வின்னரையும் அறிவிச்சாச்சே? ‘விடாது கருப்பு’ மாதிரி எதுக்கு இன்னொரு கட்டுரை?! பிக் பாஸ் வீட்டையேகூட ஒவ்வொரு கதவா கழட்டி ஆணியைப் பிடுங்கிட்டு இருப்பாங்களே?! ஏன் இங்க தேவையி... மேலும் பார்க்க

BB Tamil 8: அன்று ஒரு பேட்டிக்காக சிறை வாசலில்..! - முத்துக்குமரன் வாழ்வில் சம்பவம் செய்த காலம்

அதிசயங்களை நிகழ்த்தவல்லது காலம். சிலர் அந்த அதிசயங்களுக்காக நெடுநாள் காத்திருக்க வேண்டி வரலாம். சிலருக்குத் தூங்கி எழும் நேரத்திலும் அதிசயங்கள் அரங்கேறியிருக்கும்.சுவாரஸ்யமான ஒரு அதிசயக் கதை பார்க்கலா... மேலும் பார்க்க

BB Tamil 8: `அர்ச்சனா கிட்ட அதை சொல்ல வேண்டாம்னு சொல்லியிருந்தேன்… ஆனா!’ - அருண் எக்ஸ்க்ளுசிவ்

பிக் பாஸ் சீசன் 8 முடிவடைந்திருக்கிறது.இந்த சீசனின் டைட்டிலை முத்துக்குமரன் வென்றிருக்கிறார். பிக் பாஸ் முடிந்திருக்கும் வேளையில் வீட்டிலிருந்து வெளியேறிய அருண் பிரசாத்தை சந்தித்துப் பிக் பாஸ் தொடர்பா... மேலும் பார்க்க

BB Tamil 8: `என் தம்பி முத்துக்குமரன் தமிழ்நாட்டையே ஜெயிச்சிருக்கான்!' - தீபக் எக்ஸ்க்ளுசிவ்

பிக் பாஸ் சீசன் 8 முடிவை எட்டியிருக்கிறது.டைட்டிலை முத்துக்குமரன் தட்டிச் சென்றிருக்கிறார். பிக் பாஸ் முடிந்திருக்கும் வேளையில் அதிரடியான கேம்மை விளையாடி முடித்து வெளியேறி இருக்கும் தீபக்கை சந்தித்துப... மேலும் பார்க்க