SK: நேரில் அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்; குகேஷிற்கு கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?!
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷிற்கு நடிகர் சிவகார்த்திகேயன், சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை வழங்கி இருக்கிறார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் போட்டியிட்டு தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்தது. குகேஷுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
அதே போன்று தமிழக அரசும் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தது. பிரதமர் தொடங்கி சினிமா துறையினர் வரை பலரும் குகேஷுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்திற்கு வரவைத்து கேக் எல்லாம் வெட்டி பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமன்றி விலையுர்ந்த வாட்ச் ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.