பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியில் தனி கவனம் தேவை; கேரள அரசின் முன்னெடுப்பு !
கேரள அரசு, அரசுப் பள்ளி மாணவர்களின் வருகையை, கல்வி விவரங்கள், புகார்களை பதிவு செய்ய 'Sampoorna Plus' எனும் செயலியை செயல்படுத்தி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பே கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்துறை (KITE) இந்த செயலியை உருவாக்கி, இப்போது கேரளாவின் அனைத்து அரசுப் பள்ளிகளும் இதைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று உறுதி செய்து வருகிறது.

இதன் மூலம் மாணவர்களின் வருகைப் பதிவு, கல்வி விவரங்கள், அறிவிப்புகள், தேர்வுகள், புகார்கள், கோரிக்கைகள் என அனைத்தையும் பதிவு செய்து, மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் விவரங்களைப் பார்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
புகார்கள் ஏதும் வந்தால் அதை உடனே தலைமை ஆசிரியர் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக இதில் ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் வருகையையும், அவர்களின் கல்வியையும் தனி கவனம் எடுத்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்களின் வருகையை, சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்றும் கேரள அரசு, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. மாணவர்களுக்கு உதவிகள், புகார்கள் இருப்பின் உடனே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.