கௌதம் கம்பீரை குறுகிய காலத்தில் மதிப்பிடுவது நியாயமல்ல: முன்னாள் வீரர்
Sundar Pichai: கூகுள் சுந்தர் பிச்சைக்கு அவதூறு நோட்டீஸ் வழங்கிய மும்பை நீதிமன்றம் - காரணம் என்ன?
மும்பை நீதிமன்றம் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு நோட்டீஸை வழங்கி உள்ளது.
டெல்லியை தலைமையிடமாய் கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பு தியான் அறக்கட்டளை. இதன் புகழை கெடுக்கும் விதமாக யூடியூப்பில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது இந்த அறக்கட்டளை. இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி, மும்பை கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அந்த வீடியோவை நீக்குமாறு யூடியூப்பிற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து வாதிட்ட யூடியூப்பின் தலைமையான கூகுள் நிறுவனம், "தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69 A-ன் கீழ், அவதூறு வீடியோக்களை பிளாக் செய்ய வேண்டும் என்பதில்லை. மேலும், இது மாதிரியான வழக்குகளை சிவில் நீதிமன்றத்தில் தான் தொடர் வேண்டுமே தவிர, கிரிமினல் நீதிமன்றத்தில் அல்ல" என்று வாதிட்டது.
இதற்கு பதிலளித்த நீதிமன்றம், "தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், இந்த மாதிரியான வழக்குகளை கிரிமினல் நீதிமன்றம் விசாரிக்கத் கூடாது என்பது இடம்பெறவில்லை. இது போன்ற அமைப்புகளின் மேல், மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கும். ஒருவேளை, இந்த வீடியோவை தடை செய்யவில்லை என்றால் பொது அமைதிக்கு தீங்கு நேரலாம்" என்று பதிலளித்தது.
இந்த வீடியோவை நீக்காததற்கு நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு அவமதிப்பு நோட்டீஸை வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் தியான் அறக்கட்டளை மனு ஒன்றை வழங்கியது. இதை ஏற்று தற்போது மும்பை கூடுதல் நீதிமன்றம் கூகுளுக்கு அவமதிப்பு நோட்டீஸை வழங்கியுள்ளது. இந்த நோட்டீஸ் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையையும் சாரும்.
இந்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.