செய்திகள் :

Suriya 46: "சஞ்சய் ராமசாமி போன்ற கேரக்டர்; ஃபேமிலி கதை" - 'சூர்யா 46' சீக்ரெட்ஸ் சொல்லும் இயக்குநர்

post image

சூர்யா தற்போது 'கருப்பு' படத்தின் படப்பிடிப்பிலும், 'சூர்யா 46' படப்பிடிப்பிலும் இயங்கி வருகிறார். 'சூர்யா 46' படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஷூட்டிங் இடைவெளியில் தற்போது ஆப்பிரிக்கா டூரும் சென்றிருக்கிறார் சூர்யா.

Suriya 46
Suriya 46

சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இத்திரைப்படம் தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

இயக்குநர் வெங்கி அட்லூரி, "'சூர்யா 46' படத்தை ஒரு பயோபிக் படமாகத்தான் எடுக்க முடிவு செய்தோம். ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைப் படமாக எடுப்பதற்குத்தான் அனைவரும் தயாராகி வந்தோம். ஆனா, ஏற்கெனவே சூர்யா சார் 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' போன்ற பயோபிக் கதைகளில் நடித்துவிட்டார்.

அதனால் சூர்யா சார் பயோபிக் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இல்லை. பயோபிக் படத்திற்கு உரிமத்தை வாங்கும் பணிகளும் தாமதமாகிக் கொண்டே இருந்தன. பிறகு, அவரிடம் ஒரு குடும்பத்தை மையப்படுத்தியக் கதையைச் சொன்னேன்.

பழனி முருகன் கோவில்: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி தரிசனம்
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி

அந்தக் கதையைக் கேட்டதும் தனக்குப் பிடித்திருப்பதாக சூர்யா சார் சொன்னார். அப்போது கதை சொல்லும்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைக் கூட உறுதி செய்யவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப உணர்வுகளைப் பிரதிபலிக்கும் குடும்ப திரைப்படமாக இது நிச்சயம் இருக்கும். சஞ்சய் ராமசாமி போன்றதொரு கேரக்டரில் சூர்யா சாரைக் காண்பீர்கள்." எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"சின்னப் பையனா இருந்தவருக்கு கல்யாணமானு... வயச நம்பமாட்டேங்குறாங்க" - பகிர்கிறார் `பசங்க’ ஶ்ரீராம்

'பசங்க' திரைப்படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரங்களை என்றும் மறக்க முடியாது. சிறுவயதிலேயே அவரவரின் கதாபாத்திரங்களுக்கு முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருந்தனர். அவர்களுள் ஜீவா என்ற கதாபாத்திரத்தில... மேலும் பார்க்க

Dragon 100: ``நான் கோபக்காரன்னு புகார்கள் சொல்லியிருக்காங்க!'' - இயக்குநர் மிஷ்கின்

அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'டிராகன்'. ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். 'டிராகன... மேலும் பார்க்க

Vetrimaaran: 'STR-49'ல் இரண்டு கெட்டப்களில் அசத்தும் சிலம்பரசன்; தொடங்கும் படப்பிடிப்பு அப்டேட்

கடந்த இரண்டு நாட்களாக வெற்றிமாறன் - தனுஷ் - சிலம்பரசனின் 'வட சென்னை' என்.ஓ.சி. விவகாரம்தான் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு வெற்றிமாறன் முடிவுக்கு வந்துவிட்டவே, மீ... மேலும் பார்க்க

"தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்..." - வெற்றி மாறன்

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவிருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந... மேலும் பார்க்க

``நடிகர் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்" - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து

திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல் ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் வ... மேலும் பார்க்க