Waqf திருத்த சட்டத்தில் என்ன பிரச்னை? BJPயின் திட்டம் என்ன? | Decode | Amit Shah
Tharshan: நீதிபதி மகன் அளித்த புகார்; பிக் பாஸ் தர்ஷன் கைது - நடந்தது என்ன?
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் 'கூகுள் குட்டப்பா' என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சென்னை முகப்பேரில் வசித்து வரும் தர்ஷன் வீட்டு முன்பு டீக்கடை ஒன்றுள்ளது.

அந்த டீக்கடைக்கு ஹைகோர்ட் நீதிபதியின் மகன் ஒருவர், குடும்பத்தினருடன் காரில் சென்றிருக்கிறார். அப்போது தர்ஷனின் வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். காரை எடுக்குமாறு தர்ஷன் கூறியிருக்கிறார்.
இதனால், அவருக்கும், ஐகோர்ட் நீதிபதியின் மகனுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறி இருக்கிறது. இதில், நீதிபதியின் மகனுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் நீதிபதியின் மகன் புகார் அளித்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர். தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...