செய்திகள் :

Travel Contest: மூணாறு போனா இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க! தென்னிந்தியக் காஷ்மீரில் ஒரு ஜில் அனுபவம்!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

சுற்றுலா என்பது நாம் வழக்கமாக வாழும் இடங்களை விட்டு வேறு புதிய இடங்களைக் கண்டுகளிக்கப் பயணித்தல் ஆகும். சுற்றுலாவுக்கு ஏகப்பட்ட வரையறைகள் சொல்லப்பட்டாலும், இதுவே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

இலக்கியம் என்பதை ஏகப்பட்ட பேர் வரையறுத்து வைத்தாலும், ’இன்புறுத்துவதே இலக்கியம்’ என்ற வரையறையே சிறப்புப் பெறுவதைப் போலவே இதுவும்!

ஆன்மீகச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா,அயல் நாட்டுச் சுற்றுலா, உள்நாட்டுச் சுற்றுலா, சாகசச் சுற்றுலா, விண்வெளிச் சுற்றுலா என்று சுற்றுலாவில் மிகப் பல வகைகள் உண்டு. விளக்கிடின் மிக நீளும்!

MICE (Meetings, Incentives, Conferences and Exhibitions) சுற்றுலா என்று ஒன்று உண்டு. இது கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வணிகச் சுற்றுலா ஆகும். சரிங்க! சுற்றுலா என்றாலே நமக்கு உற்சாகமும், மகிழ்ச்சியுந்தாங்க முக்கியம்!

இதில ஆராய்ச்சியெல்லாம் எதற்கு? கோடை வெயில்ல, குளிக்கும் போதும் வேர்க்கும் சூழலை விட்டு, குளிர் பிரதேசங்களுக்குச் சென்றாலே உடம்பும் மனசும் குளிர ஆரம்பிச்சிடுமே!

இதமான குளிர் உடலைத் தழுவினாலே ஓர் உற்சாகம் வரத்தானே செய்கிறது. உள்நாட்டில் என்றால் ஊட்டி, கொடைக்கானல் என்றும் வெளிநாட்டில் என்றால் சுவிஸ், பாரிஸ் என்றும் பறக்கலாம்.

வெளி நாட்டிற்கென்றால் விசா வேண்டும்; ஓரளவு விஷயமும் தெரிந்திருக்க வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள மூணாறு சென்று வருவது எளிதானது; செலவு குறைவானது; இயற்கையை விரும்பி ரசிப்போருக்கு இதமானது.

அதிகக் குளிரில்லாத, அனுபவிக்கும் சீதோஷ்ணம் நிரம்பியது. ஆண்டு முழுவதுமே 10 லிருந்து 20 செல்ஷியஸ் வெப்ப நிலையைக் கொண்ட தென்னிந்தியக் காஷ்மீர் இது!

நாங்கள் மதுரையிலிருந்து தேனி, போடி மெட்டு வழியாகக் காரில் சென்றோம்.

சற்றே குறைய 7 மணி நேரப் பயணம். போடி மெட்டில் மலை மீது ஏறியதுமே மனதுக்குள் ஒரு துள்ளல் வந்து விடுகிறது. மலைகளே இல்லாத தஞ்சாவூர் மாவட்டக்காரர்களுக்கு மலைகளைப் பார்த்தாலே மலைப்பும் மகிழ்ச்சியும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து விடுகின்றன.

உயரத்திலிருந்து பார்த்தால் எல்லாவற்றிற்குமே தனி அழகு வந்து விடும் என்பார்கள். உண்மைதாங்க. காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி, மலையழகை மனதில் இறக்கிக் கொண்டோம்.

இப்பொழுதெல்லாம் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு சுற்றுலாவை முழுதாக அனுபவிக்க ‘ஹோம் ஸ்டே’ கான்சப்டே உதவுகிறது. அதன்படி நாங்கள் இங்குத் தங்கியது, தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே இருந்த ஒரு வீட்டில். இப்படித் தங்குவதற்குக் காரும், மூணாறை நன்கு அறிந்த காரோட்டிகளும் அவசியமுங்க.

ஓர் ஐந்து நாட்கள் டூர் இது! சுற்றுலாவை எப்போதுமே நமது வசதிக்கும், நமக்கிருக்கும் நேரத்திற்கும் ஏற்றாற்போல் வடிவமைத்துக் கொள்வது நல்லது. அப்பொழுதுதான் முழுதாகத் திருப்தி அடைய முடியும்.

சுற்றுலாவில் நாம் விரும்புவது என்ன? இதமான சீதோஷ்ணம்; மனதில் பதியும் பசுமை; மலைப்பூட்டும் மலைகள்; மனதைக் கவரும் மலர்கள்; நாம் அதிகம் காண முடியாத விலங்குகள்; சில விலங்குகளின் மீது சவாரி செய்யும் சாகசம்.

வண்ண வண்ணப் பறவைகள்; இதயத்தில் ஒட்டிக் கொள்ளும் கலர் கலரான வண்ணத்துப் பூச்சிகள்; மேலிருந்து சோவென்று விழும் நீர் வீழ்ச்சிகள்; அமைதி தவழும் ஏரிகள்; சில விஞ்ஞான முன்னேற்றங்களின் பிரதிபலிப்புகள் ஆகியவைதானே.

இவை அனைத்தையும் மூணாறில் நாம் முழுதாய் அனுபவிக்கலாம்!

போடி மெட்டு வழியாக, மூன்று ஆறுகள் (மதுப்பெட்டி, நல்லதண்ணி, பெரியாறு) மூணாறை அடைந்து எங்கள் தங்குமிடத்தை அடையவே அன்று மாலை ஆகி விட்டது.

ஆர்டர் செய்து இரவு உணவை முடித்து விட்டு, நன்றாகத் தூங்கினோம். காலையில் எழுந்து கார்மலகிரி யானை பூங்கா சென்றோம்.

ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக யானை மீது வலம் வர இங்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் போட்டோகிராபி எளிதாகிப் போனதால், ஆளுக்கொரு செல்போனுடன் வலம் வருகிறார்கள். நிதானமாக ஓர் அரை நாள் அங்குச் சுற்றினோம்.

மதிய உணவுக்குப் பிறகு, மாலை மயங்கும் நேரத்தில் குண்டலா ஏரி சென்றோம். மௌன விரதம் இருக்கும் குருவைப் போல் ஏரி அமைதி காக்க, அந்த அமைதி மெதுவாக நம் உள்ளத்திற்குள்ளும் புகுந்து கொண்டது. மாலைக் கதிரவன் மலை இடுக்கில் ஒளிய, நாங்களும் அறைக்குத் திரும்பினோம்.

அடுத்த நாள் காலையிலேயே போட்டோ பாயிண்ட் சென்று பார்த்தோம். வேண்டும் அளவுக்கு செல் வழியாக நிறைய போட்டோக்கள் எடுத்த பிறகு, அங்கிருந்து ரோஜா தோட்டம் சென்றோம். ரோஜா தோட்டம், பல வித வண்ண மலர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ரோஜாவில்தான் எத்தனை வகைகள் உள்ளன. இறைவன் நிச்சயமாகச் சிறந்த சிருஷ்டி கர்த்தா என்பதை, ரோஜாக்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் பார்க்கும்போது, மனது மகிழ்ந்து ஒத்துக் கொள்கிறது.

மலர்களையும், பழங்களையும் அவற்றின் நறுமணத்தோடே அன்று முழுவதும் ரசித்தோம்!

மறுநாள் முழுவதையும் இரவி குளம் தேசிய பூங்காவிற்கு ஒதுக்கி விட்டோம்.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட, சிறப்புக்குரிய பூங்கா இது. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஆனமுடி மலையும் கை கோர்க்கும் இடமிது.

நீலகிரி தார்கள், தங்க நரிகள், புலிகள், சிறுத்தைகள் என்று ஏகப்பட்ட விலங்குகளை இங்குக் கண்டு மகிழ முடிகிறது. ஒவ்வொரு இடமாக நின்று, பார்த்து, சில இடங்களில் சிறு ஓய்வுக்காக அமர்ந்து, அவசரமில்லாமல் பார்த்து வந்தோம்.

மறுநாள் எக்கோ பாயிண்டிற்கும் சின்னார் வனவிலங்கு சரணாலயத்திற்கும் சென்றோம். முத்ரபுழா, நல்லதண்ணி, மற்றும் குண்டலா மலைகள் சந்திக்கும் இடமாகும் இது. எக்கோ கேட்க, தொண்டை ரணமாகும் வரை மக்கள் கத்துவது ரசிக்கும்படி இருக்கிறது.

தலைக்கு மேலே தவழ்ந்தோடும் வெண் மேகங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் ராட்சச அணில்கள், காட்டெருமைகள், புலிகள், சிறுத்தைகள் ஆகியவற்றைப் பார்த்துப் பரவசப்படலாம்.

டாடா டீ மியூசியத்தையும், போகும் வரும் வழிகளில் உள்ள நீர் வீழ்ச்சிகளையும் பார்த்து, ரசித்ததோடு, ஒரு மாலைப் பொழுதில் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பி, சில தேயிலைத் தோட்டங்களைச் சுற்றி வந்தோம்.

போகும் வழிகளில், ஆங்காங்கே இருக்கும் வியூ பாயிண்டுகளில் இறங்கி, செல் போன்களில் நாம் விரும்புபவற்றை அடக்கியபடி, பிரிய மனமின்றி மூணாறைப் பிரிந்தோம்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விமானத்தில் செல்பவர்கள் கொச்சி சென்று அங்கிருந்து மூணாறு செல்லலாம்.

சுமார் 125 கி.மீ., தூரந்தான். ரயிலில் செல்பவர்கள் ஆலுவா சென்று,110 கி.மீ.இல் உள்ள மூணாறை அடையலாம். கோவை, பொள்ளாச்சி, கொச்சி, ஆலுவா போன்ற இடங்களிலிருந்து பேருந்தில் பயணிக்கலாம்.

மினிமம் 3 நாட்களாவது வேண்டும். ஓரளவுக்குச் சுற்றிப் பார்க்க. ஒரு முறை போய்ப் பார்த்து வாருங்கள். மலையாளம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளே போதுங்க!

கேரளாவில் ஒருவர் ‘சாயாக்கடை’ வைத்திருந்தாராம். அதாங்க! நம்ம ஊரு டீக்கடை!

வருகின்ற வருமானத்திற்கேற்றாற் போல் ஒரு தொகையைத் தினமும் தனியாக அவரும் அவர் மனைவியும் எடுத்து வைத்து விடுவார்களாம்.

ஆண்டிற்கொரு முறை அவ்வாறு சேமித்த தொகையில் சுற்றுலா செல்வார்களாம். அப்படி அவர்கள் சுமார் 13 வெளி நாடுகளைக் கண்டு களித்து வந்தார்களாம்.

அவரைப் போல நாமும் செய்ய ஆரம்பித்தால், பார்க்காத பல இடங்களைப் பார்த்து மகிழ்ந்து வரலாம். கையைக் கொண்டாங்க. ஒரு ஹை-பை அடித்து ஆரம்பிப்போம்!

- பெருமழை விஜய்,

கூடுவாஞ்சேரி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest: 'ஒரு கருப்பு முட்டை சாப்பிட்டா 7 வருட ஆயுள் கூடுமா?' - அதிசயமான ஜப்பான் எரிமலை பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவான தேனிலவுப் பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: 'உப்புச் சுரங்கம்; சாகச தீம் பார்க்; விமான மியூசியம்' - பிரமிப்பான போலாந்து சுற்றுலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பனங்கிழங்கை பார்த்து பதறிய அதிகாரி! - சவுதி பயண அனுபவம் | Travel Contest

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: Cruise கப்பலில் மூன்று நாள் கடல் உலா; ஆடம்பரமான பஹாமாஸ் கடல் சுற்றுலா அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: "வண்டிய நிறுத்துங்க; பயப்படாதீங்க’’ - பதைபதைக்க வைத்த பரம்பிக்குளம் சுற்றுலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க