Trump: தடுக்கி விழுந்த ட்ரம்ப்: வைரலாகும் வீடியோ; ஜோ பைடனுடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் மக்கள்!
2023-ம் ஆண்டு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் செயல்படும் விமானப் படைக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அப்போதைய அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தார். அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே வயது முதிர்ந்த அதிபரான ஜோ பைடன் விழுந்தபோது இப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவரை கிண்டல் செய்யும் வகையில், ``ஜோ பைடனால் ஏர் ஃபோர்ஸின் படிக்கட்டுகளில்கூட ஏறிச் செல்ல முடியாது... எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான எந்தத் அருகதையும் இல்லாத ஒருவர் எங்களுக்கு அதிபராக இருக்கிறார்" என சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
These Air Force One ✈️ stairs are apparently faulty ♀️
— MAGA Kitty (@SaveUSAKitty) June 8, 2025
President Trump was the first to fall victim, immediately followed by Secretary of State Marco Rubio.
WATCH pic.twitter.com/muq4ckb1wg
இந்த நிலையில், தற்போது அதுபோன்ற ஒரு சூழல் அதிபர் ட்ரம்புக்கும் ஏற்பட்டிருக்கிறது. நியூ ஜெர்சியில் உள்ள மோரிஸ்டவுன் விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்த ஏர் ஃபோர்ஸ் படிகளில் ஏறும்போது, டொனால்ட் ட்ரம்ப் வழுக்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து சென்ற வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் அதே படிக்கட்டில் தடுமாறி விழுந்துள்ளார். அது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.