ஹரியாணா: கால்வாயில் வாகனம் கவிழ்ந்ததில் 9 பேர் பலி, 3 பேர் மாயம்
Union Budget 2025 : பட்ஜெட்டில் இடம்பெறாத `தங்கம்' குறித்த அறிவிப்பு.. இன்று சந்தையில் விளைவு என்ன?
உலக அளவில் பொருளாதார மந்த நிலை, போர் பதற்றம், உலக நாடுகள் தங்கம் வாங்கிக் குவிப்பது போன்ற காரணங்களால்... தங்கம் விலை ஏற்கெனவே தாறுமாறாக உயர்ந்துகொண்டிருந்தது.
இன்று வெளியாகும் மத்திய பட்ஜெட்டில் தங்கம் குறித்த ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகி, தங்கம் விலை குறையலாம் என்று மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஆனால், அப்படி எந்த அறிவிப்புமே இன்று தாக்கலான பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,745-க்கும், பவுன் ரூ.61,960-க்கும் விற்பனை ஆகி வந்தது.
தங்கம் விலையில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இன்றைய மூன்று மணி நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.45-ம், பவுனுக்கு ரூ.360-ம் உயர்ந்துள்ளது. இது அதிரடி மாற்றமாகும். இது தங்கம் விலையின் புதிய உச்சமாகும்.
கடந்த ஆண்டு, ஜூலை மாதம் தாக்கல் ஆன பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 குறைந்தது குறிப்பிடத்தக்கது.