செய்திகள் :

US Issue: ``கைவிலங்குடன் 40 மணிநேர பயணம்; 19 பெண்கள் அவதி..'' -பிரதமருக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

post image

பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்​கா​வில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தி​யர்​கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். 

அமெரிக்க அரசாங்கம் இந்தியர்களை நடத்திய விதத்துக்கு எதிர்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அந்த வகையில் அதனது எக்ஸ் தளத்தில் "பிரதமர் மோடியால் தனது குடிமக்களை அவமானத்திலிருந்து பாதுகாக்க முடியாதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் செல்வப்பெருந்தகை.

US - மோடிக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

அனைவருக்கும் ஒரே கழிப்பறை!

அவரது பதிவில், "அமெரிக்கா ராணுவ விமானத்தின் மூலம், இந்தியர்கள் 104 நபர்கள் கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, 40 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 19 பெண்களும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்துள்ளது. மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் பயங்கரவாதிகள் போன்று இந்தியர்களை வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்."

இதற்குதான் 100 கோடியில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியா?

"வெளியுறவுத்துறை அமைச்சர் இது நடைமுறையில் உள்ளதான் என்கிறார். கொலம்பியா போன்ற ஒரு சிறிய நாடு, தனது நாட்டின் பிரஜைகளுக்கு துணை நின்று, அமெரிக்கா மீது தனது கோபத்தை காட்டியது. ஆனால், விஸ்வகுரு என்று பாஜகவினரால் சிலாகிக்கப்பட்டு, ஒரு பொய் பிம்பத்தை கட்டி வைத்திருக்கும் பிரதமர் மோடியால் தனது குடிமக்களை அவமானத்திலிருந்து பாதுகாக்க முடியாதா?

namaste trump

இதற்குதான் இந்திய நாட்டினரின் வரிப்பணத்தில் இருந்து 100 கோடிக்கும் மேல் செலவு செய்து 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை நடத்தினாரா பிரதமர் மோடி?" என்று தெரிவித்துள்ளார்.

Amit shah-க்கு நெருக்கடி தரும் STALIN-ன் All India Move... டெல்லி ஸ்கெட்ச்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,தமிழ்நாட்டில் தளம் அமைக்க வேண்டும் என அமித்ஷா மூன்று முக்கியமான பிளானை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை முறியடிக்க கூடிய வகையில் மூன்று முக்கியமான அஸ்திரங்களை ஏவியுள்ளார் ஸ்டாலி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு - இதுக்கெல்லாம் பணம் கொடுத்தாங்களா?! DMK | Parliament | US | UGC Adani Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - டெல்லி சட்டமன்றத் தேர்தல்: 60% வாக்குப்பதிவு... யார் முன்னிலை வகிக்கிறார்கள்?* - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்காளர் வாக்குப்பதிவு?* - கௌதம் அதானியின் இளைய மகனின் தி... மேலும் பார்க்க

Thiruparankundram மலை பிரச்னைக்கு இதுதான் காரணம் | Decode

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னையின் தொடக்கம் என்ன, பின்னணியில் இரு... மேலும் பார்க்க

``பாம் வைப்பதும் அவரே.. எடுப்பதும் அவரே...'' -எடப்பாடியை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

எதிர்கட்சி தலைவர் எடப்பாடியை விமர்சித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “ சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் ... மேலும் பார்க்க

Gaza: ``காஸாவை சொந்தமாக்க ட்ரம்ப் திட்டம்; ஆபத்தானவை..'' -கொந்தளிக்கும் உலக நாடுகள்! காரணம் என்ன?

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில், கடந்த செவ்வாய்கிழமை நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களைச... மேலும் பார்க்க

Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும் ஒரு காய்!

உடலில் நீர்ச்சத்தையும், வெப்ப நிலையையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் வெள்ளரிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. மலிவான விலையில், மருத்துவப் பயன்கள் நிறைந்துகிடக்கும் வெள்ளரிக... மேலும் பார்க்க