செய்திகள் :

Vanangaan: "தனித்து நின்று வெற்றி பெற்ற இயக்குநர்" - பாலாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

post image
திரைப்பட இயக்குநர் பாலாவுக்கு வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பாலா திரையுலப் பயணத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் முடிவடைவதையும், அவரது வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவையும் இணைந்து கொண்டாடும்படி இன்று மாலை சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் விழா நடைபெற உள்ளது.

பாலாவின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை வாழ்த்தி சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க சில இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் திரு. பாலாஅவர்களின் திரையுலக வெள்ளி விழாவும், அவர் இயக்கிய 'வணங்கான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வரும் டிசம்பர் 18ஆம் நாள் சென்னையில் நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

'வணங்கான்' படப்பிடிப்பில் பாலா

"போட்டிகள் நிறைந்த தமிழ் திரை உலகில், தனது முதல் படத்தையே வணிக நோக்கமின்றி, சமூக நோக்கத்துடன் வெற்றிப்படமாக எடுத்து, இன்று வரை தனது பாணியை யாருக்காகவும் கைவிடாமல், தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார், இயக்குநர் பாலா அவர்கள்.

"வணிக நோக்கமின்றி, சாமான்ய மக்களின் வலியும், வேதனைகளையும் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்களை இயக்கி, கடந்த 25 ஆண்டுகளாக போட்டிகள் நிறைந்த தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தேடிக் கொண்டவர் ‘இயக்குனர் திரு பாலா' அவர்கள்.

தனது திரையுலக குரு 'திரு. பாலுமகேந்திரா' என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் இயக்குனர் திரு. பாலா அவர்களது கலைப்பயணம் வெற்றியுடன் தொடர வேண்டும்என்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் காமட்சி தயாரித்துள்ள வணங்கான் திரைப்படத்தில் அருண்விஜய் நடித்துள்ளார். உடன் ரோஷ்னி பிரகாஷ், இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகவிருக்கிறது.

G.V.Prakash: "ஜீ.வி.100 இசைப் பயணம்; கமல் சார் படத்துக்கு இசையமைக்கணும்" - ஜீ.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மூவரையும் வைத்து தனது அடுத்தப் படமாக 'SK 25'வை இயக்குகிறார் சுதா கொங்காரா. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இது ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்பட... மேலும் பார்க்க

Soori: `தொடங்கியது சூரியின் அடுத்த படம்' பிரசாந்த் பாண்டிராஜ் - 'மாமன்' பட சுவாரஸ்யங்கள்

'விடுதலை பார்ட் 1'க்குப் பிறகு வியக்க வைக்கும் அவதாரம் எடுத்து வருகிறார் சூரி. 'கொட்டுக்காளி', 'கருடன்' படங்களை அடுத்து வெற்றிமாறனின் 'விடுதலை 2' நாளை மறுதினம் வெளியாகிறது.அதனையடுத்து கதையின் நாயகனாக ... மேலும் பார்க்க

Pushpa 2: `Kissik' பாடல் கிடைச்சதுக்குக் காரணமே `Golden Sparrow' பாடல்தான் - பாடகி சுப்லாஷினி

வசூலில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது `புஷ்பா 2'.அல்லு அர்ஜூன் இத்திரைப்படத்தின் புஷ்பா கதாபாத்திரத்திற்காக அவ்வளவு மெனகெட்டிருக்கிறார். அந்த அசாதாரண உழைப்பும் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. கதாநாயகியா... மேலும் பார்க்க

Samuthirakani: "இவன் சினிமாவ நெனச்சே பார்க்கக் கூடாதுனு காலால் உதைச்சாங்க" - சமுத்திரக்கனி உருக்கம்

அறிமுக இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'திரு.மாணிக்கம்'.இத்திரைப்... மேலும் பார்க்க

Ameer: ``விஜய்யை தரம் தாழ்ந்து பேசினால் தி.மு.க வாக்குகளை இழக்கும்" - அமீர்

சமுத்திரக்கனி நடித்திருக்கும் 'திரு.மாணிக்கம்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.இதுகுறித்து பேசியிருக்கும் இயக்குநர் அமீர், "தி.மு.... மேலும் பார்க்க