செய்திகள் :

Vasundhara Oswal: உகாண்டா சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபரின் மகள்.. என்ன காரணம்?

post image
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால். தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இவர் தன் மகள் வசுந்தரா ஓய்வால் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உகாண்டா நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கும்படியும் ஐ.நா பணிக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்திய வம்சாவளி தொழிலதிபர் அபய் குமார் ஓஸ்வால். இவரது, 'ஓஸ்வால் குரூப் குளோபல்' நிறுவனம் உலகம் முழுதும் பெட்ரோ கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், உரம் மற்றும் சுரங்க தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இவரது மகன்தான் பங்கஜ் ஓஸ்வால். இவர் ஓஸ்வால் ஆக்ரோ மில்ஸ் மற்றும் ஓஸ்வால் கிரீன்டெக் நிறுவனங்களை துவங்கி நடத்தி வருகிறார். மனைவி ராதிகாவுடன் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

வசுந்தரா ஓய்வால், பங்கஜ் ஓய்வால்

கோடிக் கணக்கில் சொத்துகள் இருக்கும் பங்கஜ் ஓஸ்வாலின் மகளான வசுந்தரா ஓஸ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் உள்ள, 'பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், உகாண்டா போலீசார் அவரை சட்டவிரோதமாக சிறைபிடித்து, கடந்த 1ம் தேதி முதல் காவலில் வைத்து உள்ளதாக பங்கஜ் ஓஸ்வால் குற்றம்சாட்டி இருக்கிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், நகைகளை திருடியதுடன், 1.60 கோடி ரூபாய் வங்கி கடன் பெற்றதாகவும், அதை திருப்பிச் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த கடன் தொகைக்கு ஓஸ்வால் குடும்பத்தினர் உத்தரவாதம் அளித்துள்ளதை அடுத்து, அவர்களிடம் பணத்தை திருப்பிச் செலுத்தும்படி வங்கி அழுத்தம் கொடுத்திருக்கிறது. அவர்கள் பணத்தை செலுத்த மறுத்ததை அடுத்து, வசுந்தரா ஓஸ்வால் மீது கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து, அவரை சட்டவிரோதமாக போலீசார் சிறைபிடித்துள்ளதாக ஓஸ்வால் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருகின்றனர். சட்ட உதவியை நாடவும் அனுமதி மறுக்கப்படுவதாக பங்கஜ் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் மகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, ஐ.நா., பணிக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

வசுந்தரா ஓய்வால்

யார் இந்த வசுந்தரா ஓஸ்வால்?

வசுந்தரா ஓஸ்வால், 1999 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது வயது 26. இவர் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். முதலில் ஓஸ்வால் குழுமத்தின் ஆக்சிஸ் மினரல்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக வசுந்திரா பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் உள்ள, 'பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார். ஓய்வால் குழுமத்தில் முதலீடுகளை நிர்வகித்தல், நிதி நடவடிகைகளை மேற்பார்வை செய்தல், புதிய வணிக முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிறுவனத்தின் பல திட்டங்களிலும் அவர் பங்காற்றி இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Doctor Vikatan: மழைக்காலத்தில் போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படும் Flu vaccine.. யாருக்கு அவசியம்?

Doctor Vikatan: மழை மற்றும் குளிர் காலங்களில் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருக்க, ஃப்ளு தடுப்பூசி போட வேண்டும் என்று செய்திகள் வருகின்றனவே... அந்தத் தடுப்பூசி எதற்கானது... யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

Chandrachud ``என் குழந்தைகளுக்கான பரிசோதனை வலி மிகுந்தவை'' - இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட், தன்னுடைய மகள்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் முன்னால் பேசிய வீடியோ ஒன்று பலருடைய மனதையும் உருக்கும் வண்ணம் இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் சிறார்களுக்கான நீதி... மேலும் பார்க்க

Israel - Gaza: ``என்னிடம் மூன்று செய்திகள் இருக்கிறது..." - போர் முடிவு குறித்து இஸ்ரேல் பிரதமர்!

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தொடர் அத்துமீறலுக்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ் குழு. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வர். தொடர்ந்து அந்த அமைப்பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேர்க்கடலை.. வறுத்ததா, வேகவைத்ததா... எது ஆரோக்கியமானது?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச்சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா... தினமும் எடுத்துக்கொள்ளலாமா?பதி... மேலும் பார்க்க

``தமிழகத்தின் இருமொழி கொள்கையை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்'' - ப.சிதம்பரம்

"தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான், அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ரவி - ப.சிதம்பரம்... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் விவகாரத்தில் பாஜக அரசின் மௌனத்துக்கு இதுதான் காரணம்.." - செல்வப்பெருந்தகை தாக்கு

பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் போரை நிறுத்த வேண்டும் என அமைதிக்கான மக்கள் இயக்கம் கருத்தரங்க கூட்டம் ராயப்பேட்டை ரம்ஜான் மஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ்... மேலும் பார்க்க