Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிட...
Vetrimaaran - Dhanush: மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - வெளியான தகவல்
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மாதம் `விடுதலை பாகம் 2' திரைப்படம் வெளியாகியிருந்தது.
சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணால், கிஷோர் எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த விடுதலை படத்தின் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களையும் 'ஆர். எஸ் இன்போடெயின்மென்ட்' நிறுவனமே தயாரித்திருந்தது.
வெற்றிமாறன், சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவலும் முன்பே வெளியாகியிருந்தது. கூடிய விரைவில் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்பதை தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். `வாடிவாசல்' திரைப்படத்திற்காக சூர்யா, காளைகளை வாங்கி வளர்கிறாராம். அது மட்டுமல்ல படத்திற்கான சில ஆரம்பக்கட்ட வேலைகளும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.
விடுதலை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஆர். எஸ் இன்போடெயின்மென்ட்' நிறுவனத்தில் மற்றொரு திரைப்படத்தையும் இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இத்திரைப்படம் வெற்றி மாறன் இயக்கும் 9-வது படம். பொல்லாதவன், ஆடுகளம் வடசென்னை அசுரன்' போன்ற திரைப்படங்களையும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை இணைகிறது இந்தக் கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம் வடசென்னை அசுரன்' போன்ற திரைப்படங்களையும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை இணைகிறது இந்தக் கூட்டணி.