செய்திகள் :

Viduthalai 2: `இளையராஜா சார் ஸ்டுடியோ, ஸ்கூல் மாதிரி'- `தினந்தினமும்' `காட்டுமல்லி' பாடகி அனன்யா பட்

post image
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் `விடுதலை 2' இன்று வெளியாகியிருக்கிறது.

இளையராஜா இசையில் உருவாகியிருக்கிற பாடல்கள் அத்தனையும் கவனம் ஈர்த்திருக்கிறது. `தினந்தினமும்', `மனசுல' என மெலடி பாடல்கள் மனதை உருக வைக்கிறது. இந்த இரண்டு பாடல்களை இளையராஜாவுடனும், சஞ்சய் சுப்ரமணியத்துடனும் இணைந்துப் பாடியிருக்கிறார் பின்னணி பாடகி அனன்யா பட். இந்த பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு சட்டென வருவது `காட்டுமல்லி' பாடல்தான். `கே.ஜி.எஃப் 2' படத்தில் மெகபூபா பாடலைப் பாடிய அவர் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார்.

முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்துல இருக்கும் அத்தனை மெலடியையும் நீங்கதான் பாடியிருக்கீங்க. உங்களைத் தொடர்ந்து பாட வச்சதுக்கான காரணத்தைச் சொன்னாங்களா?

`விடுதலை' ஒரு ப்ரீயட் திரைப்படம். அதுமட்டுமல்ல இயற்கைக்கு ரொம்பவே நெருக்கமான திரைப்படம். அப்படியான திரைப்படத்துக்கு என்னுடைய குரல் சரியாக பொருந்தி இருந்ததுனால இரண்டாம் பாகத்துலையும் தொடர்ந்து பாட வச்சதுக்கு காரணமாக இருக்கும்னு நினைக்கிறேன். இரண்டாம் பாகத்துல பாடினதும் என்னுடைய கரியர்ல கிடைச்ச பேரணுபவம். இளையராஜா சார்கூட `தினந்தினமும்' பாடல் பாடியிருக்கேன். சஞ்சய் சுப்ரமணியம் சார்கூட `மனசுல' பாடல் பாடியிருக்கேன். முதல் பாகத்துல இருந்த கதாபாத்திரங்கள்தான் இரண்டாம் பாகத்துலையும் தொடர்ந்து வருவாங்க. கதையும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகதான் இருக்கும். நானும் என்னைத் தொடர்ந்து பாட வைக்கிறதுக்கான காரணத்தைக் கேட்கல. எனக்கு ராஜா சார் இசையில பாடுற ஒரு பாக்கியம் கிடைச்சிருக்கு. அதுபோதும். எதுக்கு நான் போய் தொடர்ந்து பாட வைக்கிறீங்கன்னு கேட்க போறேன்( உற்சாகத்துடன் சிரிக்கிறார்)...கே.ஜி.எஃப் படத்தை எடுத்துக்கோங்க. அதனுடைய முதல் பாகத்துல நான்தான் பாடியிருப்பேன். இரண்டாம் பாகத்துலையும் நான்தான் பாடியிருப்பேன். ஒரே நபர் தொடர்ந்து பாடும்போது அதே எமோஷன் கிடைக்கும்னு நான் நினைக்கிறேன்.`விடுதலை 2'ல பாடுறதுக்கு என்னென்ன டாஸ்க் இருந்தது ?

இளையராஜாவுடன் அனன்யா பட்

`விடுதலை 2'ல பாடுறதுக்கு என்னென்ன டாஸ்க் இருந்தது ?

முதல் பாகத்துல பாடும்போது கொஞ்சம் பயம் இருந்தது. இரண்டாம் பாகத்துக்கு பாடுறதுக்குள்ள ராஜா சார்கூட நிறைய கான்சர்ட்ல பாடிட்டேன். ராஜா சார் இசையில `மார்கழி திங்கள்' திரைப்படத்துல மூன்று பாடல்கள் பாடிட்டேன். இப்படியான சமயங்கள்ல நான் பழகிட்டேன். அவர் இசையில எந்தளவுக்கு கவனமாக பாடணும்னு நான் கத்துக்கிட்டேன். ராஜா சார் ஸ்டுடியோவுக்கு போகுறது எனக்கு ஸ்கூல் மாதிரி. அவ்வளவு விஷயங்களை கத்துகிட்டேன்.

முதல் பாகத்தின் பாடல்களை பாடினதுக்குப் பிறகு ராஜா சார் பாராட்டாக என்ன விஷயம் சொன்னார்?

நானாக சார்கிட்ட , ` நான் பாடினது பிடிச்சிருக்கா'னு கேட்டேன். அவர், `என்னயா கேட்குற, மக்களுக்கு உன் பாடல் அவ்வளவு பிடிச்சிருக்கு'னு சொன்னார். `விடுதலை' திரைப்படத்துல பாடினதுக்குப் பிறகு எனக்கு சென்னைல அடையாளம் கிடைச்சது. என் பெயர் அனன்யா பட்னு சொன்னதும் `ஓ, காட்டுமல்லி சிங்கரா'னு சொல்லி அடையாளப்படுத்தினாங்க. ஜூலை மாசத்துல சென்னைல ஒரு கான்சர்ட் நடந்தது. அங்க `காட்டுமல்லி' பாடலை அப்படி கொண்டாடினாங்க. பாடல்களுக்கு நியாயம் செய்திருக்கேன்னு இரு திருப்தி இருக்கு. சில வரிகளை இப்போ கேட்கும்போதும் `இன்னும் நம்ம நல்லா பாடியிருக்கலாம்'னு தோணுது.

`மார்கழி திங்கள்'. `விடுதலை'னு ராஜா சார் இசையில தொடர்ந்து பாடிட்டு வர்றீங்க. அவர் உங்க திறமையை எங்க கண்டுபிடிச்சார்?

ஈஷாவுல நான் பாடின `சோஜுகடா சூஜு மல்லிகே' பாடல் கேள்விப்பட்டிருப்பீங்க... அந்த பாடலுக்குப் பிறகு இளையாராஜா சார் `திவ்ய பாசுரம்'னு ஒரு ஆல்பம் பண்ணினார். அந்த ஆல்பமுக்குதான் முதன்முதல்ல பாட வந்தேன். அந்த தருணத்துல என்னுடைய குரல் `விடுதலை' படத்துக்கு சரியாக இருக்கும்னு தேர்ந்தெடுத்தார். `விடுதலை' பாடலோட ரெக்கார்டிங்ல வெற்றி மாறன் சார் இருப்பார். அவர் காட்சிகளை எனக்கு சொல்லுவார். அப்புறம் அவரே `ராஜா சார்கிட்ட இப்படி பண்ணலாமா'னு கேட்பார். அவங்க டிஸ்கஸ் பண்ணி முடிச்சதுக்குப் பிறகு எனக்கு ராஜா சார் சொல்லிக் கொடுப்பார்.

Ilaiyaraja

மொத்தமாக `விடுதலை' ஆல்பத்துல நான்கு பாடல்கள் பாடியிருக்கீங்க. எந்தப் பாடல் உங்களுக்கு சவலாக இருந்தது?

`வழி நெடுக' பாடல்தான் எனக்கு சவாலாக இருந்தது. சொல்லப்போனால், அந்தப் பாடல் பாடும்போது நான் அழுதுட்டேன். முதல் முறை பாடும்போது கொஞ்சம் பயமும் இருக்கும் இல்லையா... எங்களுக்கெல்லாம் இசைஞானி சார் கடவுள் மாதிரி. ராஜா சார்கூட அந்த `காட்டுமல்லி' பாடலை பாடினேன். அதுவொரு அழகிய தருணம். ராஜா சார் என்னை சிரிக்க வைப்பார். ரொம்ப ஊக்கம் கொடுப்பாரு. சூழ்நிலை கடினமாக இருந்தாலும் ராஜா சார் கம்ஃபோர்ட்டாக வச்சுக்குவார். அந்த சமயத்துல பயத்தையும் அவர் கொடுக்கமாட்டாரு. இதெல்லாம் என்னுடைய புண்ணியம்னுதான் சொல்வேன். நான் கன்னடம்ங்கிறதுனால ராஜா சாரோட கன்னட பாடல்கள்தான் ரொம்ப ஃபேவரைட். தமிழ்ல எனக்கு `நிலாவே வா' ரொம்ப பிடிக்கும்.

Viduthalai 2: ``ஃபைட் சீன்ல விலா எலும்பு உடைஞ்சிடுச்சு; அப்பா சொன்ன வார்த்தை..." - கென் கருணாஸ்

'விடுதலை-2' வில் சில நிமிட காட்சிகளே வந்தாலும் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாப்பாத்திரத்துக்கே, வாத்தியாராக திரையரங்கை மிரட்டி; புரட்டி எடுத்த வலிமையான கதாப்பாத்திரம்தான் கருப்பன்.'விடுதலை 1'-ல் மிர... மேலும் பார்க்க

Viduthalai 2: "மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்..." - தனுஷ் சொல்லியதென்ன?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 2. இந்தத் திரைப்படம் இடது சாரி அரசியல் குறித்து ஆழ... மேலும் பார்க்க

Viduthalai 2: ``12 வருட காத்திருப்பு, 15 வருட போராட்டம்! இதுக்கு கிடைச்ச பலன் விடுதலை!'' - ஜெய்வந்த்

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `விடுதலை பாகம் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.படத்தின் இண்டர்வெல் காட்சியில் வாத்தியார் பண்ணையார்களில் ஒருவரை வெட்டி... மேலும் பார்க்க