செய்திகள் :

Waqf: "இன்றைய நிலவரப்படி, 8.72 லட்சம் வக்பு சொத்துக்கள் இருக்கின்றன" - ராஜ்ய சபாவில் கிரண் ரிஜிஜூ

post image

எதிர்க்கட்சிகளின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், வக்பு திருத்த மசோதா 2025-ஐ (Waqf Amendment Bill 2025) நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று (ஏப்ரல் 2) தாக்கல் செய்தார்.

12 மணிநேரம் நீடித்த விவாதத்தில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலிருந்து 232 எம்.பி-க்கள் இந்தத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இருப்பினும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 288 எம்.பி-க்களின் ஆதரவுடன் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதாவை இன்று (ஏப்ரல் 3) தாக்கல் செய்தார்.

அப்போது உரையாற்றிய கிரண் ரிஜிஜு, ``இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு, மாநில அரசுகள், சிறுபான்மை ஆணையங்கள், வக்பு வாரியங்களுடன் ஆலோசனை நடத்தினோம்.

பின்னர், மக்களவை, மாநிலங்களவை பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) அமைத்தோம். அதன் பிறகு, JPC மீது பலர் சந்தேகம் எழுப்பினாலும், நேற்று மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இன்றைய நிலவரப்படி, 8.72 லட்சம் வக்பு சொத்துக்கள் இருக்கின்றன. 2006-ல் 4.9 லட்ச வக்பு சொத்துக்களின் வருமானம் ரூ. 12,000 கோடி என்று சச்சார் கமிட்டி மதிப்பிட்டிருந்தால், இன்றைய சொத்துக்களின் வருமானத்தை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்.

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

இந்த மசோதா மீதான விவாதத்தின் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது, வக்பு வாரியத்துக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

வக்ஃப் வாரியத்தில் நடக்கும் முறைகேடுகளைப் போக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். சில அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு வங்கிக்காகப் பொய்களைப் பரப்புகின்றன.

வக்பு சொத்துக்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார். இந்த மசோதாவில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமையும் இருக்கிறது.

ஒருவருக்கான உரிமை தீர்ப்பாயத்தின் மூலம் கிடைக்கவில்லையென்றால், அவர் இந்த விதியின் மூலம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

இந்தத் திருத்த மசோதாவானது, `ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரம் அளித்தல் திறன் மற்றும் மேம்பாடு (UMEED - Unified Waqf Management Empowerment Efficiency and Development)' என்று பெயர் மாற்றம் செய்யப்படும்" என்று கூறினார்.

இதே உரையின்போது கிரண் ரிஜிஜூ, ``2014 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்துவதற்கு முன்பாக, 2014 மார்ச் 5-ம் தேதியன்று அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசு, 123 பிரதான சொத்துக்களை மறுமதிப்பீடு செய்து டெல்லி வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தது. இந்த சொத்துக்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்குச் சொந்தமானவை" என்று கூறினார் குறிப்பிடத்தக்கது.

TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும் விஜய்!

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒரு தனித்தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஓர் அறிக்கைய... மேலும் பார்க்க

``அடுத்து வருபவர்கள் நல்லா பண்ணுவார்கள் தலைவா!" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால... மேலும் பார்க்க

நித்தியானந்தா: பழங்குடிகளின் நிலம் பறிப்பா? பொலிவியாவில் 20 கைலாசாவாசிகள் நாடு கடத்தல்; பின்னணி?

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்ற தகவல் உறுதியாகத் தெரியவில்லை.ஆனால், அவரது சமூக வலைத்தள பக்கங்களில் மட்டும் பதிவுகள், போட்டோக்கள், வீடியோக்கள் தினமும் பதிவாகி வ... மேலும் பார்க்க

மணிப்பூர்: 'பிரச்னையை விவாதிக்க நடுராத்திரி 2 மணியா?' - மக்களவையில் கனிமொழி அடுக்கிய கேள்விகள்

2023-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, மணிப்பூரில் கலவரங்கள் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், இன்னமும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆளும் பாஜக அரசு என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது... அத்தனை கலவரங்களும... மேலும் பார்க்க

'திருக்குறளும், இந்தி பாடலும்' நிர்மலா சீதாராமன் Vs திருச்சி சிவா - மாநிலங்களவையில் சுவாரஸ்ய விவாதம்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை எதிர்ப்பு குறித்த கடுமையான விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் திமுக எம்... மேலும் பார்க்க

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய பாலிடிக்ஸ்

கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். முன்னதாக, அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க-வுக்கு நான்கு இடங்கள் கிடை... மேலும் பார்க்க