செய்திகள் :

Youtube 2024: `Mr.Beast முதல் WWE வரை' - அதிகம் பார்க்கப்பட்ட யூடியூப் சேனல்கள் இவைதான்

post image

உலகிலேயே அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட தாப் 10 யூடியூப் சேனல்கள், மிஸ்டர் பீஸ்ட் (337 மில்லியன்), டி-சீரிஸ் (281 மில்லியன்), கோகோமெலன் (187 மில்லியன்), செட் இந்தியா (180 மில்லியன்), விளாத் அண்ட் நிக்கி (130 மில்லியன்), கிட்ஸ் டையானா ஷோ (128 மில்லியன்), லைக் நாஸ்ட்யா (124 மில்லியன்), பீவ்-டை-பை (110 மில்லியன்), ஜீ மியூசிக் கம்பனி (112 மில்லியன்), டபிள்யூ.டபிள்யூ.ஈ (106 மில்லியன்) இவைதான். இவற்றில் 3 சேனல்கள் இந்திய சேனல்கள்.

இந்த டாப் 10 சேனல்களைத்தான் அதிகம் மக்கள் பார்த்து ரசிக்கின்றனரா என்றால் அதுதான் இல்லை. எபிடெமிக் சவுண்ட் தளத்தின் தரவுகள் அடிப்படையில், உலகில் அதிகம் பார்வையாளர்களைப் பெறும் சேனல்களுக்கென்று தனிப் பட்டியல் உள்ளது.

  1. டி-சீரிஸ் - 277.64 பில்லியன் வியூஸ்

  2. கோகோமெலன் - 194.36 வியூஸ்

  3. செட் இந்தியா - 172.79 வியூஸ்

  4. சோனி எஸ்.ஏ.பி - 123.32 வியூஸ்

  5. கிட்ஸ் டயானா சோ - 109,08 பில்லியன் வியூஸ்

YouTube
  1. லைக் நஸ்டயா - 108.26 வியூஸ்

  2. விளாத் அண்ட் நிக்கி - 99.48 வியூஸ்

  3. ஜீ டிவி - 97.66 வியூஸ்

  4. டபிள்யூ.டபிள்யூ.ஈ - 90.24 பில்லியன் வியூஸ்

  5. டாய்ஸ் அண்ட் கலர்ஸ் - 82.66 வியூஸ்

இரண்டாவது பட்டியலில் 4 இந்திய சேனல்கள் உள்ளன. ஜீ டிவி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. youtube தளம் கிட்டத்தட்ட 100 நாடுகளில் செயல்படுகிறது. ஆனாலும் இந்தியாவின் மக்கள் தொகை காரணமாக இங்கு வெற்றிகரமாக செயல்படக் கூடிய தொலைக்காட்சி மற்றும் சினிமா தொடர்பான சேனல்களே அதிகம் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுவிடுகின்றன.

ஆனால் அமெரிக்காவைப் போல சுயாதீன யூடியூபர்கள் அதிக சப்ஸ்கிரைபர்களைப் பெறுவதில்லை. காரணம், அமெரிக்காவில் கிட்டத்தட்ட அனைவருமே ஆங்கிலம் பேசக் கூடியவர்கள். ஆனால் இந்தியாவில் அப்படியில்லை. உலகம் முழுவதும் பகிரப்படும் வகையில் ஆங்கிலம் இருந்தாலும், இந்தியாவில் ஆங்கிலம் கற்றவர்கள் எல்லா மாநிலங்களிலும் இருப்பதில்லை என்பதனால் பெரும்பாலான சுயாதீன படைப்பாளிகள் பிராந்திய மொழியிலேயே கன்டென்ட் போடுவதுடன் பிராந்திய மொழி மக்களால் மட்டுமே பார்க்கப்படுகின்றனர்.

உங்களுக்குப் பிடித்த யூ-டியூப் சேனலைக் கமென்ட் பண்ணுங்க!