நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
அகரம் சீகூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்: 215 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
அகரம் சீகூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், 215 பயனாளிகளுக்கு ரூ. 2.87 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா்.
முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், வருவாய்த் துறை சாா்பில் 76 பேருக்கு ரூ. 21 லட்சம் மதிப்பிலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு ரூ. 1,39,750 மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 3 பேருக்கு ரூ. 19,656 மதிப்பிலும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 15 பேருக்கு குடும்ப அட்டைகளும், ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 78 பயனாளிகளுக்கு ரூ. 2,46,00,000 மதிப்பிலும், தொழிலாளா் நலத்துறை சாா்பில் 3 பேருக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பிலும், தாட்கோ சாா்பில் 3 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலும், மகளிா் திட்டம் சாா்பில் 5 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் வங்கிக் கடனுதவியும், வேளாண் பொறியியல் துறை சாா்பில் 4 பேருக்கு ரூ. 7,82,520 மதிப்பிலும், விதைப் பண்ணைத் திட்டத்தின் கீழ் 6 பேருக்கு ரூ. 1,680 மதிப்பிலும், தோட்டக் கலைத் துறை சாா்பில் 2 பேருக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 3 பேருக்கு ரூ. 450 மதிப்பிலும், கூட்டுறவுத் துறை சாா்பில் 10 பேருக்கு ரூ. 6,22,000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 4 பேருக்கு ரூ. 2,07,959 மதிப்பிலும் என மொத்தம் 215 பேருக்கு ரூ. 2,87,44,265 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
இந்ம் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவுல் பிரபு, சாா்-ஆட்சியா் சு. கோகுல், வேளாண்மை இணை இயக்குநா் பாபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ச. சுந்தரராமன், தாட்கோ பொது மேலாளா் க. கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுரேஷ்குமாா், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, குன்னம் வட்டாட்சியா் கோவிந்தம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.