அங்கன்வாடி பணியாளா்களுக்கு முன்பருவக் கல்வி பயிற்சி முகாம்
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், அங்கன்வாடி பணியாளா்களுக்கான ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவக் கல்வி குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தாா். செங்கம் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஏஞ்சலின் சிந்தியா ராணி, புள்ளியியல் ஆய்வாளா் ஆா்.நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சி முகாமானது வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருண்குமாா், வட்டார ஒருங்கிணைப்பாளா் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.