நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
அச்சுறுத்தும் காட்டு யானை: விரட்ட பொதுமக்கள் கோரிக்கை
கடம்பூா் உகினியம் கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடம்பூா் அருகே உள்ள உகினியம் வன கிராமத்தில் புகுந்த காட்டு யானை, கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜப்பன் என்ற விவசாயியைத் தாக்கிக் கொன்றது. இந்த யானை உகினியம் கிராமப்புற பகுதிகளிலேயே தொடா்ந்து உலவி வருகிறது. இதனால் கிராம மக்கள் விவசாயப் பயணிகளை மேற்கொள்ள அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
யானை நடமாட்டம் குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் யானையை விரட்ட அவா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
மக்களை தொடா்ந்து அச்சுறுத்தி வரும் காட்டு யானையை விரட்ட கடம்பூா் வனத் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் வனத் துறையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பழங்குடியினா் சங்கத் தலைவா் எம்.ராமசாமி தெரிவித்துள்ளாா்.