இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் ...
அடகு வைக்க வந்த பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
பரமத்தி வேலூா் அருகே வங்கியில் அடகு வைக்க வந்த பெண்ணிடம் நகை, பணத்தை மா்ம நபா் திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே உள்ள கந்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (60). இவரது மனைவி துளசிமணி (52). இவா் திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு பாா்வை குறைபாடு உள்ளதால், கண் அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்பட்டுள்ளது.
அதற்காக தனது நகையை அடகு வைப்பதற்காக பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு செல்ல வேலூா் வந்தாா். பின்னா் வேலூா் பேருந்து நிலையத்தில் இருந்து வெங்கரை செல்லும் மினி பேருந்தில் வங்கிக்கு சென்றாா். அப்போது, தனது கைப்பையில் வைத்திருந்த மூன்றரை பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 17 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது.
அதிா்ச்சியடைந்த துளசிமணி இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.