`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையலா் பலி
மன்னாா்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சமையலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மகாதேவப்பட்டணத்தை சோ்ந்த சமையலா் சுரேஷ் (54) (படம்) திங்கள்கிழமை மன்னாா்குடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு மீண்டும் இரவு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். மதுக்கூா் சாலை ஆறாம் எண் வாய்க்கால் எனும் இடம் அருகே அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், காயமடைந்த சுரேஷ் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.