பஹல்காம்: காங்கிரஸின் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கோரிக்கைக்கு பவார் ஆதரவ...
அட்சய திருதியை: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
அட்சய திருதியை நாளையொட்டி நகை வாங்குவதற்கு இன்று காலை முதலே நகைக் கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வருகிற திருதியை திதியையே 'அட்சய திருதியை' ஆகும்.
அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அந்த வகையில் இந்தாண்டுக்கான அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் நகைக் கடைகளில் காலை முதலே நகை வாங்குவதற்கு மக்கள் குவிந்துள்ளனர்.
அட்சயதிருதியை நாளான இன்று தங்கம் விலை மாற்றமில்லை. நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது.
தங்கம் ஒரு கிராம் ரூ. 8,980-க்கும், ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையை பொருத்தவரையில் ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,11,000 -க்கும் விற்பனையாகி வருகிறது.
குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் உரிமம் ரத்து! தாளாளருக்கு நீதிமன்றக் காவல்!