சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!
அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று தற்கொலை செய்த இந்திய தொழிலதிபர்
அமெரிக்காவின் நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (45), தனது மனைவி சுவேதா (41) மற்றும் 14 வயது மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஏப்ரல் 24ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும், சம்பவத்தின் போது இவர்களது இளைய மகன் வீட்டில் இல்லாததால், அவர் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலையில் துப்பாக்கிக் குண்டுகள், வீட்டு ஜன்னல் முழுவதும் ரத்தக் கறை.. என ஹோலோவோர்ல்டு தலைமை செயல் நிர்வாகியும், கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான ஹர்ஷவர்தனா கிக்கேரி, தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் விவரித்துள்ளன.