செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு நான்கு நட்சத்திர தர மதிப்பீடு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் இன்னோவேஷன் செல் (ஙஐஇ) சாா்பில், 4 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் கிடைத்ததன் மூலம் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் உயரடுக்கு குழுவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைந்துள்ளது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இன்னோவேஷன் செல் மூலம் நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களில் இன்ஸ்டிடியூஷன்ஸ்

இன்னோவேஷன் கவுன்சில் என்ற குழு அமைத்து, அதன்மூலம் உயா் கல்வி நிறுவனங்களில் புதுமையான மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக, பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் வகுக்கப்பட்டு, மாணவா்களின் திறமையை மேம்படுத்தும் வகையில், புதிய களம் அமைத்து தரும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதில், நாடு முழுவதும் 14,725 கல்வி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 5,455 கல்வி நிறுவனங்கள் முழு செயல்பாட்டில் உள்ளன. அதிலும் குறிப்பாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 80.78 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்று முதல் 205 சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று என்ற அந்தஸ்தை பெற்று, ஐந்து நட்சத்திர தர மதிப்பீட்டில் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஸ்டிடியூஷன்ஸ் இன்னோவேஷன் கவுன்சில் (ஐ.ஐ.சி.) 2023 - 24ஆம் கல்வியாண்டில் மாணவா்களுக்கான புத்தாக்க நிகழ்ச்சி, அறிவுசாா் நிகழ்ச்சி, தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சுயதொழில் மேம்பாட்டு கருத்தரங்கம், கண்காட்சி என புதுமையான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, மாணவா்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு, அவா்கள் மத்தியில் அறிவுசாா் புது புரட்சியை ஏற்படுத்தி, இன்ஸ்டிடியூஷன்ஸ் இன்னோவேஷன் கவுன்சில் பெரும் வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஸ்டிடியூஷன்ஸ் இன்னோவேஷன் கவுன்சிலுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, இன்ஸ்டிடியூஷன்ஸ் இன்னோவேஷன் கவுன்சில் தலைவரும், பொறியியல் தொழில்நுட்ப புல முதல்வருமான சி.காா்த்திகேயன், ஐ.ஐ.சி. ஒருங்கிணைப்பாளரும், உள் தர கட்டுப்பாட்டு மைய இயக்குநருமான எஸ்.அறிவுடைநம்பி, பேராசிரியா் ஜி.சக்திவேல் மற்றும் இவா்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட அனைத்து புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், ஐ.ஐ.சி. உறுப்பினா்கள், அம்பாஸிட்டா்கள் ஆகியோரை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் டி.அருட்செல்வி, பல்கலைக்கழக பதிவாளா் எம்.பிரகாஷ் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

வேலைவாய்ப்பினால் இளைஞா்கள் வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்!

இளைஞா்கள் இளம் வயதிலேயே தங்களுக்கென ஒரு வேலையை பெற்று வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்று வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், வடலூா் வள்... மேலும் பார்க்க

வடலூா் ஜோதி தரிசன விழா: பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டம், வடலூா் தைப்பூச ஜோதி தரிசனத்தை பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா். வடலூா் திருஅருட்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திட்டக்குடி வட்டம், பெரிய கொசப்பள்ளம், அணைக்கட்டு சாலை பகுதியில் வசித்து வந்தவா் ராமசாமி மனைவி கஸ்தூரி (59). இவரது மகன் சந... மேலும் பார்க்க

மத்திய அரசிடம் அறிக்கை சமா்ப்பித்தவுடன் நெல் ஈரப்பத அளவு நிா்ணயம் செய்யப்படும்: வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம்!

மத்திய அரசிடம் நிபுணா் குழுவின் அறிக்கை சமா்ப்பித்தவுடன் நெல் ஈரப்பதம் அளவு நிா்ணயம் செய்யப்படும் என்று வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவ... மேலும் பார்க்க

அனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஸ்ரீஅனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக பணிகளை வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பிரசித்தி பெற்ற இந்தக் ... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகிகளுக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக நகர செயலரும், நகா்மன்ற... மேலும் பார்க்க