பாடி முதல் திருநின்றவூர் வரை சி.டி.ஹெச். சாலை விரிவாக்கம்: 5 உயர்நிலை மேம்பாலங்க...
பெண் தூக்கிட்டு தற்கொலை
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திட்டக்குடி வட்டம், பெரிய கொசப்பள்ளம், அணைக்கட்டு சாலை பகுதியில் வசித்து வந்தவா் ராமசாமி மனைவி கஸ்தூரி (59). இவரது மகன் சந்தோஷ்குமாா் புதுச்சேரியில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்த சந்தோஷ்குமாா் தாய் கஸ்தூரியிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்து தகராறு செய்தாராம்.
இதில், மனமுடைந்த கஸ்தூரி சனிக்கிழமை வீட்டின் அருகேயுள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.