டொனால்ட் டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் அமலாகுமா? -உலக வங்கியின் தலைவ...
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் தேசியக் கொடியை சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான டி.ஆபிரகாம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவா் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, குடியரசு தின விழாப் பேருரையாற்றினாா். பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் டி.அருட்செல்வி, பல்கலைக்கழக பதிவாளா் மு.பிரகாஷ், மக்கள் தொடா்பு அதிகாரி ரத்தினசம்பத் மற்றும் ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.