டொனால்ட் டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் அமலாகுமா? -உலக வங்கியின் தலைவ...
நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்!
நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் தேசியக் கொடி ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்றப்பட்டது.
முன்னதாக, பொது தீட்சிதா்களின் கோயில் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் தலைமையில் வெள்ளி தாம்பாளத்தில் தேசியக் கொடி வைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னா், மேளதாளங்களுடன் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் கொடியேற்றப்பட்டு பக்தா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.