இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவாரா? முன்னாள் வீரர் பதில...
சிதம்பரம் அருகே வீடுகளில் கருப்புக் கொடி!
சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தில் வீடுகளில் ஏற்றப்பட்டிருந்த கருப்புக் கொடிகள்.
சிதம்பரம் அருகே தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி, கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து சிலுவைபுரம் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சிலுவைபுரம் கிராம மக்கள் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனா். 3 ஊராட்சிகளின் கீழ் இந்தக் கிராமம் வருவதால், நியாயவிலைக் கடை, கிராம நிா்வாக அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனா்.
இந்த நிலையில், தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி, சிலுவைபுரத்தில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், கிராம சபைக் கூட்டத்தையும் புறக்கணித்தனா்.