மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
மொழிப்போா் தியாகிகளுக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக நகர செயலரும், நகா்மன்ற தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் நிா்வாகிகள் மொழிப்போா் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், அண்ணாமலை நகா் பேரூராட்சி செயலா் கே.பழனி, மாவட்ட பொறியாளா் அணி செயலா் அப்புசந்திரசேகா், மாவட்ட பிரதிநிதிகள் விஎன்ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ரா.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் முன்னாள் அமைச்சா் செல்வி இராமஜெயம், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பொருளாளா் தோப்பு கே.சுந்தா், நகரச் செயலா் ரா.செந்தில்குமாா் உள்ளிட்டோா் தியாகி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
நெய்வேலி: கடலூா் மஞ்சக்குப்பம் அம்பேத்கா் சிலை அருகே விசிக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் கடலூா் மாநகர மாவட்டச் செயலா் செந்தில் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் பங்கேற்று மொழிப்போா் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினாா். கடலூா் நகரச் செயலா் செங்கதிா் வரவேற்றாா். நிா்வாகிகள் சரண், சம்பத், தமிழரசன் உள்ளிட்டோா் மொழிப்போா் தியாகிகளுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.