செய்திகள் :

அதிக தொகைக்கு விற்கப்பட்ட கூலி வெளிநாட்டு உரிமம்!

post image

கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்த் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது. இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரைக்கு வருவதால் அதற்கான வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன.

இப்படத்தின் முதல் பாடலை இந்த வார இறுதிக்குள் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ. 81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். தகவல் உண்மையென்றால், இதுவே அதிக தொகைக்கு விற்கப்பட்ட முதல் தமிழ் சினிமாவாகும். மேலும், அண்டை மாநிலங்களின் விநியோகிஸ்தர்களுக்கான உரிமமும் அதிக தொகைக்கு பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கூலி திரைப்படம் பெரிய வணிக வெற்றியை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: நிறுத்துங்கப்பா! புகைப்படக்காரர்களால் ஆத்திரமான சமந்தா!

விஜய் சேதுபதி நடித்த சீரியலின் பெயர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, சின்ன திரை தொடர்கள், குறும்படங்கள் என படிப்படியாக நடித்து தேசிய விருது வென்ற நடிகராக உயர்ந்துள்ளார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டில... மேலும் பார்க்க

மாமியார் பிரியா ராமன் பிறந்தநாளைக் கொண்டாடிய மருமகள் ஷபானா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், நடிகை பிரியா ராமனுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில், பிரியா ராமனுக்கு சின்ன திரை நடிகை ஷபானா நெகிழ்ச்சியுடன் பிறந்தநாள் வாழ... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை: 15 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பையில் இதுவரை 1.5 மில்லியன் (15 லட்சம்) டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கிளப் உலகக் கோப்பையின் முதல் போட்டி கடந்த ஜூன்.15ஆம் தேதி தொடங்கிய... மேலும் பார்க்க

கார்த்தி படத்தில் நிவின் பாலி!

நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் நிவின் பாலி இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். ஆனால், வெ... மேலும் பார்க்க

குபேரா தணிக்கைச் சான்றிதழ், ரன்னிங் டைம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷின் குபேரா திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா பிரதான பாத்திரத்திலும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவ... மேலும் பார்க்க

கடந்த காலத்துக்கு நன்றி! பிறந்த நாளில் சின்ன திரை நடிகை ஷோபனா கருத்து!

கடந்த காலத்துக்கு நன்றி என சின்ன திரை நடிகை ஷோபனா கருத்து தெரிவித்துள்ளார். பிறந்தநாளையொட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர், நிகழ்கால முயற்சிகளுக்கும் எதிர்கால பலன்களுக்கும் சேர்த்து நன்றி எனப் பதிவிட்ட... மேலும் பார்க்க