செய்திகள் :

``அதிகமாக டிரோல் செய்யப்பட்ட நீதிபதி நானாகத்தான் இருப்பேன்..!" - தலைமை நீதிபதி சந்திரசூட் கலகல

post image
இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட்டின் கடைசி பணி நாளான நேற்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து விடை பெற்றார்.

புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11-ல் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரிவு உபசரிப்பு விழாவில் பேசிய சந்திரசூட், " என்னைத் தொடர்ந்து வழி நடத்துவது எது என்று கேட்டீர்கள். இந்த நீதிமன்றம்தான் என்னைத் தொடர்ந்து வழி நடத்த வைத்தது. தேவையில் இருப்பவர்களுக்கும், நீங்கள் சந்திக்காதவர்களுக்கும், உங்களுக்குத் தெரியாத நபர்களுக்கும், அவர்களைப் பார்க்காமலேயே உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் திறன் கொண்டவர்களுக்கும் சேவை செய்வதை விட மேலான உணர்வு வேறு எதுவும் கிடையாது.

தலைமை நீதிபதி சந்திரசூட்

இளம் சட்ட மாணவராக இந்த நீதிமன்றத்தின் கடைசி வரிசையில் அமர்ந்தது முதல் இப்போது தலைமை நீதிபதியாக பதவி வகித்தது வரை பல நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. நாட்டிற்குச் சேவையாற்றுவதற்கான மகத்தான பாக்கியம் எனக்கு கிடைத்தது. நீதிமன்றத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நாளும் சட்ட அறிவு மற்றும் தனிப்பட்ட நுண்ணறிவு இரண்டையும் கற்றுக் கொள்ளவும் வளரவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

நாங்கள் இங்கு நீதியை நிலைநாட்டுகிறோம். இருப்பினும் தற்செயலான தவறுகள் அல்லது தவறான புரிதல் அடிப்படையில் நான் யாரையும் புண்படுத்தியிருந்தால், நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் " என்று கூறியிருக்கிறார்.

நீதிபதி சந்திரசூட்

தொடர்ந்து பேசிய அவர், "வரலாற்றிலேயே அதிகம் டிரோல் செய்யப்பட்ட நீதிபதி நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். திங்கள்கிழமை முதல் அவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசனையாக உள்ளது. என்னை டிரோல் செய்த எல்லோருக்கும் வேலை இல்லாமல் போய்விடுமே" என்று கடைசியில் நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`எந்த மதமும் மாசுபாட்டை ஏற்படுத்தும் விதமாக எதையும் ஊக்குவிக்கவில்லை' - உச்ச நீதிமன்றம்

காற்று மாசுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்படும் பகுதிகளில் டெல்லி எப்போதும் முன்னணியில் இருக்கும். அதனால், கடந்த மாதம் 14-ம் தேதி டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உத்தரவ... மேலும் பார்க்க

வரதட்சனை வழக்கு: பாஜக-வின் ஏ.பி.முருகானந்தத்துக்கு பிடி வாரன்ட்.. கோவை நீதிமன்றம் அதிரடி!

கோவை மாவட்டம், சாவடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசாமி . இவரது மகள் ஞான சௌந்தரிக்கும், பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ள ஏ.பி. முருகானந்தத்துக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.ஏ.பி.முருகானந்... மேலும் பார்க்க

காணாமல் போன தாத்தா வீடு... இப்போதும் தேடும் தலைமை நீதிபதி!? - வெளியான தகவல்!

இந்தியாவின் உயரிய பதவிகளில் ஒன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பு. 50-வது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட்டின் பதவி காலம், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிந்ததைத் தொடர்ந்து, ... மேலும் பார்க்க

தாமிரபரணியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம்: நீதிபதிகள் ஆய்விற்கு முன் மாநகராட்சி நடவடிக்கை!

2018, தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், "நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் ச... மேலும் பார்க்க

Chandrachud: தீர்ப்பு, உத்தரவு, செயல்பாடு... சந்திரசூட்டின் தலைமை நீதிபதி பொறுப்பும் விவாதங்களும்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிசந்திரசூட்அதிகாரத்தில், ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தாலும் அவர்களை கண்டித்து, தண்டிக்கும் அதிகாரம் முழுமையாகப் பெற்ற இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கிய மூன்றாவது தூண். ஜனநா... மேலும் பார்க்க

Chandrachud: `மணிப்பூர் டு தேர்தல் பத்திரம்’ - சந்திரசூட் வழங்கிய பரபரப்பு தீர்ப்புகள்! - ஒரு பார்வை

இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட்இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் 2022 நவம்பர் 9 அன்று பதவியேற்றார். பதவியேற்ற நேரத்தில், சந்திரசூட் மீது மக்களுக்கு பெரும் நம்பிக்... மேலும் பார்க்க