மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!
அதிமுக - பாஜக கூட்டணி: ஓபிஎஸ் சொன்ன சுவாரசிய பதில்!
அதிமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ’இன்று விடுமுறை’ என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. அமித் ஷா வருகையின்போது கூட்டணி உறுதியானது.
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே அமைத்துள்ளோம், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக தெரிவித்தார்.
இந்நிலையில், கோவை கணபதியில் உள்ள இயற்கை நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சிகிச்சை முடிந்து இன்று(ஏப். 18) வீடு திரும்பினார்.
அப்போது, செய்தியாளர்கள் முன்னாள் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திடம், அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறுமா? என்ற கேள்விக்கு அவர், ‘இன்று விடுமுறை’ என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிக்க: வரலாற்றில் மிக மோசமான மோசடி.. போலி விமான நிலைய விற்பனை!