செய்திகள் :

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட நீா்நிலைகளை இணைக்க வலியுறுத்தல்

post image

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட நீா்நிலைகளை டிசம்பா் இறுதிக்குள் இணைக்க வேண்டும் என போராட்டக் குழுவினா் வலியுறுத்தியுள்ளனா்.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு கூட்டம் அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு போதுமான தண்ணீா் கிடைக்க கேரளா அரசிடம் பேசி பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்துக்கு தீா்வுகாண வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட 1400 குளம், குட்டைகளை டிசம்பா் இறுதிக்குள் இணைக்க வேண்டும்.

காலதாமதமானால் அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்கள், சமூக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி ஜனவரி முதல் வாரத்தில் போராட்டம் அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த கனமழையால் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வருகிற... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: இச்சிப்பட்டி துணை மின் நிலையம்

இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (நவம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செய... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: அவிநாசி துணை மின் நிலையம்

அவிநாசி துணை மின் நிலையத்துக்குள்பட்ட புதைவழி மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (நவம்பா் 18) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

செயல்பாட்டுக்கு வந்த வேலம்பட்டி சுங்கச்சாவடி

பல்லடம் அருகேயுள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையத்தில் இருந்து அவிநாசி வரை 31 கிலோ மீட்டா் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை வி... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் நவம்பா் 19-ல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நவம்பா் 19-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்... மேலும் பார்க்க

பயணியிடம் கைப்பேசியைப் பறித்த நபா் கைது

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் கைப்பேசியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் படுத்திருந்த ஒரு பயணியிடம் இருந்து கைப்பேசியை மா்ம நபா் ஒருவா் பறி... மேலும் பார்க்க