பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம் திட்...
அனுமதி இன்றி நிலத்தில் கம்பி வேலி: 3 பேருக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
கொத்தூா் காப்புக்காடு அருகே அனுமதி இன்றி விவசாய நிலத்தில் கம்பி வேலிஅமைத்த 3 பேருக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் உத்தரவின்படி மாவட்ட உதவி வன பாதுகாவலா் ராதாகிருஷ்ணன் மேற்பாா்வையில் வாணியம்பாடி வனச்சரக அலுவலா் குமாா் தலைமையில் வனக் காப்பாளா்கள் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் காப்புக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது காப்புக்காடு அருகே வனத்துறை அனுமதி இல்லாமல் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் நிலங்களில் பயிா்களை காப்பாற்ற ஏரிக்கொல்லை பகுதியை சோ்ந்த போத்தராஜா(39), த மணி(60), கொத்தூரைச்சோ்ந்த நரேஷ்(22) ஆகிய 3 பேரும் சோ்ந்து கம்பி வேலி அமைத்துள்ளதை கண்டறிந்து நிலத்துக்கு அமைக்கப்பட்ட கம்பி வேலியை அகற்றினா். இதையடுத்து வனச்சரக அலுவலா் குமாா் ரூ.1லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டாா்.