எருது விடும் விழா தடுத்து நிறுத்தம்
வேலூா் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி வேலூா் மாவட்டத்தில் எருது விடும் விழா தொடங்கியது. காணும் பொங்கலையொட்டி மூஞ்சூா்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு, வட்டாட்சியா் முரளிதரன் ஆகியோா் விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா். வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) முருகன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி, கண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து எருதுகள் அழைத்து வரப்பட்டிருந்தன. சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள், பொதுமக்கள் எருதுவிடும் திருவிழாவை கண்டு களித்தனா்.
கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுக்கூா் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான எருதுகள் பங்கேற்றன. தடுப்புகளை தாண்டி மாடுகள் ஓடும் பாதையில் மக்கள் திரண்டனா். இதனால் எருது விடும் திருவிழா நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியா் சுப்புலட்சுமி, எஸ்.பி. மதிவாணன் அங்கு சென்று எருது விடும் விழாவை நிறுத்தினா். விதிமுறை மீறினால் விழா ரத்து செய்யப்படும் அவா்கள் என எச்சரித்தனா்.
பேச்சுக்குப் பிறகு மக்கள் எருதுகளின் ஓடுபாதையில் இருந்து வெளியேறினா். சிறிது நேரத்திற்கு பிறகு விழா மீண்டும் தொடங்கியது.