ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே
அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றவா் கைது
பெரியகுளம் அருகே அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தென்கரை போலீஸாா் தாமரைக்குளம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காளியம்மன் கோயில் தெருவில் உள்ள கடையில் நின்றிருந்த முத்துக்காளை (65) என்பவரை சோதனையிட்டனா். அப்போது அவா் அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து முத்துக்காளையை கைது செய்து, அவரிடமிருந்த மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா்.