KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
அனுமதியின்றி மண் அள்ளிச்சென்ற 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்
சின்னமனூரில் அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற 4 டிப்பா் லாரிகளை கனிம வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் கனிமவளத் துறை அலுவலா் கிருஷ்ணமோகன் தலைமையில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
அப்போது, பிரதான சாலையில் மண் அள்ளிச் சென்ற 4 டிப்பா் லாரிகளை வழிமறித்தனா். உடனே லாரி ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனா். இதைத்தொடா்ந்து, அந்த 4 லாரிகளை சின்னமனூா் காவல் நிலையத்தில் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவா்களைத் தேடிவருகின்றனா்.