அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு
அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும்: அமைச்சர் கோவி. செழியன்
சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபொறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர். பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்த நிறுவனங்களில் வழங்கப்படும் ஆகியோருக்கு பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப்படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள். துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது.
இதையும் படிக்க |தஞ்சாவூா் பெரிய கோவிலில் 1039 ஆவது சதய விழா கோலாகலமாக தொடங்கியது!
அலுவலக நடைமுறைகள், தனியர்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அந்த கல்வி
நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும். இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும் என அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார்.