செய்திகள் :

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை! இது 2-வது முறை!!

post image

எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக இன்று(மே 8) நடைபெற்ற 2-வது அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று(வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டி.ஆர். பாலு மற்றும் இதர கட்சியினர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள், தற்போதைய நிலைமை குறித்து விளக்கினார்.

கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் 'மத்திய அரசுக்கு துணையாக இருக்கிறோம் எனக் கூட்டத்தில் தெரிவித்தோம். சில ரகசியத் தகவல்களை பகிர்ந்துகொள்ள முடியாது என்று அவர்கள் கூறினர்' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, 'அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லையே?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு மிக பொறுப்பான முறையில் பதிலளித்த கார்கே, "விமர்சிப்பதற்கான நேரம் இதுவல்ல, நாம் மிகவும் கடினமான காலத்தில் இருக்கிறோம். இதுதொடர்பாக பிரதமரிடம் பின்னர் கேள்வி கேட்போம்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியிருந்தார். எனினும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கடந்த ஏப். 24 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் சந்திப்பு

போர் நிறுத்த அறிப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடியை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் ... மேலும் பார்க்க

மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமல்! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

புது தில்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பதௌ குறித்து வெளியுறவுச் செயலர் மிஸ்ரி இன்று(மே 10) மாலை 6 மணிக்கு புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் விளக... மேலும் பார்க்க

சிவப்பு எச்சரிக்கையின் கீழ் பார்மர் மாவட்டம்.. பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்!

ஆபரேன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டத்துக்குச் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான்... மேலும் பார்க்க

இந்தியா - பாக். பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா, ஜி7 நாடுகள் அழைப்பு!

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்திருக்... மேலும் பார்க்க

ஜம்மு: பாகிஸ்தான் தாக்குதலில் 8 வீரர்கள் காயம்

ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர். ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் சனிக்கிழமை பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் 8 எல்லைப் பாதுக... மேலும் பார்க்க