செய்திகள் :

அன்று `நாளைய இயக்குநர்' போட்டியாளர்கள்; இன்று சினிமாவில் டாப் இயக்குநர்கள் - யார் யார் தெரியுமா?

post image

`நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி சினிமாவில் களம் காண ஆர்வமுடன் இருக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறது.

அப்படி இந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல ஹிட் படைப்புகளையும் கொடுத்து வருகிறார்கள். கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் `டிராகன்' படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது சினிமா கரியருக்கான பயணத்தை நாளைய இயக்குநர் நிகழ்ச்சியிலிருந்துதான் தொடங்கினார். அப்படி நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர்களின் லிஸ்டையும் அவர்களின் லேட்டஸ்ட் படைப்பையும் பார்ப்போம்....

நலன் குமாரசாமி:

நாளைய இயக்குநர் தொடங்கப்பட்ட முதல் சீசனின் டைட்டில் வின்னராக வந்தவர் நலன் குமாரசாமி. நாளைய இயக்குநருக்குப் பிறகு விஜய் சேதுபதியை வைத்து`சூது கவ்வும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படத்திற்குப் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து `காதலும் கடந்துப் போகும்' திரைப்படத்தை இவர் எடுத்திருந்தார். தற்போது கார்த்தியை வைத்து இவர் எடுத்து முடித்திருக்கும் `வா வாத்தியார்' திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ்:

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் முதல் சீசனில்தான் கார்த்திக் சுப்புராஜ் பங்குப்பெற்றார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்குப் பிறகு `பீட்சா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அடுத்தடுத்து `ஜிகர்தண்டா', `பேட்ட' என ஹிட் படங்களைக் கொடுத்தார். தற்போது சூர்யாவை வைத்து `ரெட்ரோ' படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ்

பாலாஜி மோகன்:

இயக்குநர் பாலாஜி மோகனும் இதே நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டவர்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சித்தார்த்தை வைத்து `காதலில் சொதப்புவது எப்படி?', துல்கர் சல்மானை வைத்து ` வாயை மூடிப் பேசவும்' , தனுஷை வைத்து `மாரி 1, 2' போன்றப் படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் கடைசியாக `புத்தம் புது காலை விடியாதா?' ஆந்தாலஜியில் ஒரு பகுதி வெளியாகியிருந்தது.

அஜய் ஞானமுத்து:

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டப் பிறகு இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிக்குச் சேர்ந்தார். அவரிடம் `7-ம் அறிவு', `துப்பாக்கி' போன்ற படங்களில் பணியாற்றினார். அதன் பிறகு `டிமாண்டி காலனி 1, 2', `கோப்ரா', `இமைக்கா நொடிகள்' போன்ற படங்களை இயக்கினார். இவர் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்தான தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. நடிகர் விஷால் சமீபத்தில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

ராம்குமார்:

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டப் பிறகு இயக்குநர் ராம்குமார் விஷ்ணு விஷாலை வைத்து `முண்டாசுப்பட்டி', `ராட்சசன்' போன்ற திரைப்படங்களை எடுத்தார். தற்போது விஷ்ணு விஷாலை வைத்து மற்றுமொரு படத்தையும் இயக்கி வருகிறார்.

அருண்குமார்:

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்ட அருண்குமார் விஜய் சேதுபதியை வைத்து `பண்ணையாரும் பத்மினியும்', `சேதுபதி', `சிந்துபாத்' போன்ற படங்களை இயக்கினார். இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கிய `சித்தா' திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டுச் சென்றது. தற்போது விக்ரமை வைத்து `வீர தீர சூரன் ' படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

அருண்குமார்

ரவிக்குமார்:

நாளைய இயக்குநர் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்ட இயக்குநர் ரவிக்குமார் `இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பெரும் சிரத்தைக் கொடுத்து இவர் நீண்ட ஆண்டுகள் உழைத்த `அயலான்' படம் கடந்தாண்டு வெளியாகியிருந்தது.

அருண்ராஜா காமராஜ்:

நாளை இயக்குநர் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்ட அருண்ராஜா காமராஜ் சினிமாவில் `கனா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களம் கண்டார். அதற்கு முன்பே நடிகராக சில படங்களிலும் நடித்திருந்தார். `கனா' படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து `நெஞ்சுக்கு நீதி' படத்தை இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக `லேபில்' வெப் சீரிஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருந்தது.

நித்திலன் சாமிநாதன்:

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் முன்றாவது சீசனின் டைட்டில் வின்னர்களில் ஒருவராக வந்த நித்திலன் சுவாமிநாதன் `குரங்கு பொம்மை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அத்திரைப்படம் வெளியாகி ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கிய `மகாராஜா' படம் கடந்தாண்டு வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது.

பாக்கியராஜ் கண்ணன்:

நித்திலன் சுவாமிநாதனுடன் பாக்கியராஜ் கண்ணனும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னராக வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அட்லீயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அவர் `ரெமோ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு கார்த்தியை வைத்து `சுல்தான்' படத்தை எடுத்தார். தற்போது லாரான்ஸை நாயகனாக வைத்து `பென்ஸ்' படத்தை எடுத்து வருகிறார்.

நித்திலன் சுவாமிநாதன்

மடோன் அஸ்வின்:

இதே நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கு பெற்றவர் மடோன் அஸ்வின். சினிமாவில் `மண்டேலா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தேசிய விருதையும் பெற்றார். இது அவர் வென்ற முதல் தேசிய விருது கிடையாது. இதற்கு முன் தன்னுடைய குறும்படத்திற்க்காகவும் தேசிய விருதை வென்றிருக்கிறார். `மண்டேலா' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து `மாவீரன்' எடுத்த அவர் தற்போது விக்ரமின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார்.

ஸ்ரீ கணேஷ்:

நாளை இயக்குநர் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துக் கொண்ட ஸ்ரீ கணேஷ் சினிமாவில் `8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து `குருதி ஆட்டம்' படத்தை இயக்கிய அவர் தற்போது சித்தார்த்தின் 40-வது படத்தையும் இயக்கி வருகிறார்.

இவர்களில் உங்களுடைய ஃபேவரிட் யார் என்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Aadhi: ``பேய் பயம் இருக்கு... அஜித், விஜய் சாருடன் வில்லனாக நடிக்க ஆசை..'' - நடிகர் ஆதி

'ஈரம்', 'வல்லினம்', 'குற்றம் 23' படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சப்தம்'.'ஈரம்' படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதி - அறிவழகன் இணைந்திருக்கின்றனர். தமன் இ... மேலும் பார்க்க

Kingston: ``அவர் சொல்ல மாட்டார்; செயலில்தான் காட்டுவார்..." - சுதா கொங்கரா பாராட்டு

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், G.V. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் G.V. பிரகாஷ், இப்படத்தின் மூலம் தயாரிப... மேலும் பார்க்க

Trisha: ``VTV இதயத்துக்கு நெருக்கமான படம்.." - 15 ஆண்டுகள் நிறைவு; வெற்றிக்கு த்ரிஷா சொன்ன காரணம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிந்திருக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அழகான பாடல்களுடன் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள... மேலும் பார்க்க

Vetrimaaran: ``வெற்றி மாறன் என் அம்மா மாதிரி ஏன்னா..." - நெகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளரா... மேலும் பார்க்க

Dragon: `சொல்லி வச்ச மாதிரி சீறும் டிராகன்!' - `டிராகன்' பட வெற்றியைக் கொண்டாடிய `LIK' குழுவினர்!

`டிராகன்' திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பு கிடைத்திருக்கிறது.`லவ் டுடே' படத்திற்குப் பிறகு மீண்டும் `டிராகன்' திரைப்படத்தின் மூலம் ஒரு சென்சேஷனல் ஹிட் கொடுத்திருக்கிறார் பிரதீப் ரங... மேலும் பார்க்க

Kingston: `` 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில ஜி.வி சாரோட ரசிகனாகிட்டேன்" - அஸ்வத் மாரிமுத்து

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளரா... மேலும் பார்க்க