செய்திகள் :

அமித் ஷாவின்கீழ் செயல்படும் குண்டர்கள்: கேஜரிவால்

post image

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தலைமையின்கீழ் குண்டர்கள் செயல்படுவதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது, `கடந்த 2 ஆண்டுகளாக தில்லியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. 1990 ஆண்டுகளில் மும்பையில் நிழலுலக தாதாக்கள் ஆதிக்கம் செலுத்தியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இதுபோன்ற சூழ்நிலையை தில்லியும் எதிர்கொள்ளும் என்று நினைக்கவில்லை.

தில்லி முழுவதும் குண்டர்கள் கைப்பற்றியுள்ளனர்; வணிகர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் செல்கிறது. துப்பாக்கிச் சூடும் பொதுவாகி விட்டது. இதற்கெல்லாம் யார் பொறுப்பு? தில்லியின் சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குதான் உள்ளது.

இதையும் படிக்க:நாடாளுமன்றத்தில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஒரே நேரத்தில்.. சோனியா, ராகுல், பிரியங்கா

அமித் ஷாவின் தலைமையில்தான், குண்டர்கள் மற்றும் வன்முறையாளர்களின் தலைநகரமாக தில்லி மாறியுள்ளது. கல்வி, சுகாதாரம், மின்சாரத்திற்கான பொறுப்பை மக்கள் என்னிடம் வழங்கினார்கள்; அவற்றை நான் நன்றாக வழிநடத்தினேன். சட்டத்தின் பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைத்தனர்; ஆனால், அது மோசமடைந்து விட்டது.

சில நாள்களுக்கு முன்பாக, நாங்லோயில் கடைக்காரர் ஒருவர் மீது இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த என்னை பாஜகவினர் தடுத்தனர். பாதிக்கப்பட்டவரைச் சந்திக்க என்னை ஏன் பாஜக அனுமதிக்கவில்லை? அவர்கள் எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்? மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே பயப்படுகிறார்கள். சாமானிய மக்கள், வணிகர்கள், பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மேம்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு, நாளை பள்ளிகள் திறப்பு!

மணிப்பூரின் இம்பால் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாள்களுக்குப் பிறகு நவம்பர் 29(நாளை) முதல் மீண்டும் தொடங்கும் என அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது. மேலும் பார்க்க

எந்தப் பங்குகளை வாங்கலாம்? சிறந்த 5 பங்குகள்!

தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட, இந்தியாவில் வாங்குவதற்கு 5 சிறந்த குறைந்த விலை பங்குகளாக பொருளாதார நிபுணர்கள் கூறுவது;வேகமாக வளர்ந்து வரும் பங்குகளும், அதன் வளர்ச்சி விகிதம... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

மேற்கு மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். சாங்லியில் வசிக்கும் கேடேகர்கள் மற்றும் நர்வேகர்கள் என்ற இரு... மேலும் பார்க்க

கூட்டணி தர்மத்தைப் பின்பற்றுவதில் முன்மாதிரி என் தந்தை: ஸ்ரீகாந்த்

மகாராஷ்டிரத்தின் காபந்து முதல்வராக இருக்கும் எனது தந்தை ஏக்நாத் ஷிண்டே "கூட்டணி தர்மத்தைப்" பின்பற்றுவதில் முன்மாதிரியா இருப்பதற்காக பெருமைப்படுவதாக சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறினார். முன்னதாக ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

அதானி விவகாரம், மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும்(நவ. 28) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற... மேலும் பார்க்க

மீண்டும் நகராமல் நின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

கடந்த சில மணி நேரங்களாக நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 480 கி.மீ தென்கிழக்... மேலும் பார்க்க