செய்திகள் :

அமைதிப் பேச்சுவாா்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

post image

கின்ஷாசா: ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவிருப்பதற்காக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவி எம்23 கிளா்ச்சிப் படையினா் ஏராளமான பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறியுள்ளனா். காங்கோவின் மிகப் பெரிய நகரான கோமா உள்ளிட்ட பல பகுதிகள் தற்போது எம்23 படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்தச் சூழலில், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தென்-மேற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் தலைநகா் லுவாண்டாவில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. கிளா்ச்சிப் படையுடன் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்துவதில்லை என்ற தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ள காங்கோ அரசு, இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறிவந்தது. எனினும், லுவாண்டா பேச்சுவாா்த்தையில் தாங்கள் பங்கேற்கப்போவதாக காங்கோ அரசு தற்போது அறிவித்துள்ளது.

தாது வளம் நிறைந்த காங்கோவின் நிலப்பரப்புகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், சொந்த சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.

ருவாண்டாவின் உதவியுடன் செயல்படும் அந்த அமைப்புக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நடைபெறும் மோதலில் 7,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!

டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த டிவிட்டர் நிறுவன... மேலும் பார்க்க

பூமி திரும்பும் 4 பேரின் பணிகளை மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகள்!

விண்வெளியில் இருந்து பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரின் பணிகளை மேற்கொள்ளவுள்ளவர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அடுத்த 6 மாதங்களுக்குத் தங்கியிரு... மேலும் பார்க்க

இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைப் பெற்றால் தாய்க்கு வருமான வரி விலக்கு!

ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 30 வயது வரையிலும், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வருமான வரி விலக்கு அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு ... மேலும் பார்க்க

விண்ணில் இருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை இன்ற... மேலும் பார்க்க

பூமி திரும்புவதற்கு முன்பு... நாசா வெளியிட்ட புகைப்படம்!

பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளியில் தனது குழுவினருடன் சுனிதா வில்லியம்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா வ... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 100 பேர் பலி

காஸா மீது இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ் உ... மேலும் பார்க்க