செய்திகள் :

அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் வக்ஃப் மசோதா! -காங்கிரஸ் கடும் விமா்சனம்

post image

‘சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் பாஜக வியூகத்தின் ஓா் அங்கமே வக்ஃப் மசோதா; இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்’ என்று காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

‘வக்ஃப் திருத்த மசோதா-2024’ கடுமையான குறைபாடுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நமது தனித்துவமான சமூகத்தில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த நல்லிணக்கப் பிணைப்புகளைச் சேதப்படுத்துவதற்கு பாஜக தொடா் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஓா் அங்கமே இந்த மசோதா.

தோ்தல் ஆதாயங்களுக்காக, தவறான பிரசாரம் மற்றும் தவறான எண்ணங்களை உருவாக்குவதன் மூலம் சிறுபான்மையின சமூகத்தினரை மோசமாகச் சித்தரிக்கும் பாஜக முயற்சியின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.

அரசின் நோக்கம்: மத வேறுபாடின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை நீா்த்துப்போகச் செய்யும் நோக்கமே இம்மசோதாவில் அடங்கியுள்ளது. வக்ஃப் நிா்வாகத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்ற காரணத்துடன் தற்போதுள்ள சட்டப் பிரிவுகள் நீக்கப்படுகின்றன. வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவா்களைப் பாதுகாக்கும் அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் பிரிவு வாரியாக விரிவாக ஆராயப்படவில்லை. இதன்மூலம் அனைத்து நாடாளுமன்ற நடைமுறைகளும் மீறப்பட்டுள்ளன என்று ஜெயராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.

எப்போது தாக்கல்? நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்து, அவற்றை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினா்கள் கொண்ட இக்குழு தயாரித்த 655 பக்க அறிக்கையில் பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

பின்னா், வாக்கெடுப்பு மூலம் (ஆதரவு 15, எதிா்ப்பு 11) அறிக்கைக்கு கூட்டுக் குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, வக்ஃப் மசோதா மீது கூட்டுக் குழுவால் முன்மொழியப்பட்ட 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விமான நிலையக் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம்

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த குப்பைத் தொட... மேலும் பார்க்க

அலுவலகத்தில் காபி அருந்துபவரா நீங்கள்? இருதய நோய் அபாயம் அதிகம்!

அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் மூலம் வழங்கப்படும் காபியால் இருதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.அலுவலகங்களில் இயந்திரங்களின் மூலம் வழங்கப்படும் காபி குறித்து ச... மேலும் பார்க்க

உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நிதி நாணயம் தகவல்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜப்பானைவிட அதிகரிப்பதாக சர்வதேச நிதி நாணயம் தெரிவித்துள்ளது.உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, கடந்த பத்தாண்டுகால பொருளாதாரத்தில் 105 சதவிகித வ... மேலும் பார்க்க

யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளி தலைமறைவு!

ஹரியாணாவில் 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹரியாணா ரோட்டாக் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வ... மேலும் பார்க்க

பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை!

உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை நம்பியோ வெளியிட்டுள்ளது.உலகளவில் குற்றங்களின் நிலை, பாதுகாப்பு பிரச்னைகள், சொத்து மற்றும் வன்முறை குற்றங்கள் முதலானவற்றை மதிப்பிட்டு, பாதுகாப்பான நாடுகள் குறித்... மேலும் பார்க்க

2,000 நகரங்களில் புதிய சேவையைத் தொடங்கும் ஏர்டெல்!

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுவரும் ஏர்டெல் நிறுவனம் தொலைக்காட்சிப் பிரியர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான படங்கள், இணையத் தொடர்களை கண்டுகளிக்கும் வகையில் ஐபிடிவி என்ற புத... மேலும் பார்க்க