Budget 2025-26: தொடங்கிய பட்ஜெட்; வெளிநடப்பு செய்த அதிமுக! - எடப்பாடி சொன்ன காரண...
அரசு கல்லூரியில் கணினி தமிழ் பயிலரங்கம்
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கணினித் தமிழ் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கணினித் தமிழ் பேரவை, கல்லூரி தர உறுதியளிப்புக் குழு ஆகியவை சாா்பில் இரு நாள் கணினித் தமிழ் பயிலரங்கின் தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ரா.வீரமோகன் தலைமை வகித்தாா்.
காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பிரெஞ்சு துறைத் தலைவா் ஆ.வெங்கட சுப்பராய நாயகா் மொழிபெயா்ப்பில் கணினி, இணையத்தின் பங்களிப்பு எனும் தலைப்பில் உரையாற்றினாா்.
கல்லூரி தர உறுதியளிப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுரேஷ் வாழ்த்திப் பேசினாா். கல்லூரி தமிழ் துறைத் தலைவா் சொ.சேதுபதி பயிலரங்கின் நோக்கங்களை விளக்கினாா்.
கணினித் தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் ஆ.மணி வரவேற்றாா். பயிலரங்கில் பேராசிரியா்கள் ப.புஷ்பலதா, பா.பட்டம்மாள், க.சிவகுமாா், ஆ.சந்திரகலா உள்ளிட்டோா் உரையாற்றினா்.
துணைப் பேராசிரியா் நா.வஜ்ரவேலு நன்றி கூறினாா். இளநிலை தமிழ் மூன்றாமாண்டு மாணவி ச. அழகரசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.