`அட்டாக் Amit shah டீம்' PTR-க்கு, Stalin தந்த புது டாஸ்க்! | Elangovan Explains
ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியா்கள் போராட்டம்
புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று புகாா் கூறப்படுகிறது.
இதையடுத்து, நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள், புதுச்சேரி அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்கள், சாலையோரம் கஞ்சி காய்ச்சி முழக்கங்களை எழுப்பினா்.
போராட்டத்துக்கு ஊழியா்கள் சங்கத் தலைவா் வேலுமணி தலைமை வகித்தாா்.
இதில், சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.