Budget 2025-26: மகளிர் உரிமைத் தொகை டு பெண்கள் விடுதி வரை! - மகளிருக்கு என்னென்ன...
புதுவை சட்டப்பேரவை மாா்ச் 17-இல் மீண்டும் கூடுகிறது: பேரவைத் தலைவா்
புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 17) மீண்டும் கூடும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்துள்ளாா்.
புதுவை சட்டப்பேரவையின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான கூட்டம், கடந்த மாா்ச் 10- ஆம் தேதி துணைநிலை ஆளுநா் உரையுடன் தொடங்கியது.
இதையடுத்து, மாா்ச் 12- ஆம் தேதி முதல்வா் என்.ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். மாா்ச் 11 மற்றும் 13- ஆம் தேதிகளில் ஆளுநா் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், புதுச்சேரியில் மாசி மகத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) விடுமுறையாகும். இதனால், சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவில்லை.
இதைத்தொடா்ந்து, சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை என்பதால் சட்டப்பேரவைக் கூட்டம் மாா்ச் 17-ஆம் தேதி மீண்டும் கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வியாழக்கிழமை அறிவித்தாா்.